Claim: சென்னையில் நடந்த அதிமுக பேரணியில் வடமாநிலத்தவர் பங்கேற்றனர்.
Fact:வைரலாகும் படம் சென்ற ஆண்டு டெல்லியில் எடுக்கப்பட்டதாகும்.
திமுக ஆட்சியில் நடக்கும் பலவேறு முறைகேடுகள் மற்றும் சட்டம், ஒழுங்கு சீர்கேடுகள் குறித்து அதிமுக சார்பில் ஆளுநரை சந்தித்து மனு அளிக்க எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த திங்களன்று சென்னையில் பேரணி ஒன்று நடந்தது.
இப்பேரணியில் வடமாநிலந்தவர் கலந்துக் கொண்டதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
சென்னையில் நடந்த அதிமுக பேரணியில் வடமாநிலத்தவர் பங்கேற்றதாக புகைப்படம் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
வைரலாகும் புகைப்படத்தில் ‘நிரஞ்சன்’ எனும் வாட்டர்மார்க் இருப்பதை காண முடிந்தது. நிரஞ்சன் குமார் புதிய தலைமுறையின் டெல்லி பத்திரிக்கையாளர் ஆவார். எனவே அவரது டிவிட்டர் பக்கத்தில் வைரலாகும் படம் குறித்து தேடினோம்.
அதில், “குடியரசு தலைவர் வழியனுப்பு விருந்தில் கலந்துகொள்ள டெல்லி வரும் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை வரவேற்க காத்திருக்கும் அதிமுகவின் டெல்லி தொண்டர்கள்” என்று குறிப்பிட்டு கடந்த ஆண்டு ஜூலையில் வைரலாகும் இப்படங்களை அவரது டிவிட்டர் பக்கத்தில் நிரஞ்சன் குமார் பகிர்ந்திருப்பதை காண முடிந்தது.
இப்படங்கள் டெல்லியிலிருக்கும் தமிழ்நாடு புது இல்லத்தில் எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதேபோல் தமிழ்நாடு இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி வாகனம் நுழையும்போது அதிமுகவினர் மலர் தூவி வரவேற்கும் வீடியோவையும் நிரஞ்சன் குமார் பகிர்ந்திருந்ததையும் காண முடிந்தது.
Also Read: பிரியாணியில் கருத்தடை மாத்திரை கலந்து இந்துக்களுக்கு விற்பனை செய்த முஸ்லீம் நபர் கைதா?
Conclusion
சென்னையில் நடந்த அதிமுக பேரணியில் வடமாநிலத்தவர் பங்கேற்றதாக பரப்பப்படும் தவறானது என்பதும், அப்படங்கள் கடந்த ஆண்டு டெல்லியில் எடுக்கப்பட்டது என்பதும் நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகின்றது
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Tweet from @niranjan2428, Dated July 22, 2022
Tweet from @niranjan2428, Dated July 22, 2022
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)