Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: 1971ல் வங்கதேச சுதந்திர போரில் பங்குப்பெற்ற பெண்களின் படம்
Fact: வைரலாகும் படத்திலிருப்பவர்கள் சுதந்திர போராளிகள் இல்லை, அப்படம் 1961ல் எடுக்கப்பட்டதாகும்.
“1971 பங்களாதேச விடுதலை போரின் போது 4 பெண்கள் எடுத்த படத்தை நினைவு கூர்வதற்காக திரும்ப எடுத்த போது” என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
1971ல் வங்கதேச சுதந்திர போரில் பங்குப்பெற்ற பெண்களின் படம் என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியதை தொடர்ந்து, அப்படத்தின் உண்மை பின்னணி குறித்து அறிய அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அப்படம் குறித்து தேடினோம்.
இத்தேடலில் “Women are posing with gun in a village trip, Bangladesh (கிராம சுற்றுலா ஒன்றில் துப்பாக்கியுடன் தோற்றமளிக்கும் பெண்கள், வங்கதேசம்)” என்று குறிப்பிட்டு Bangladesh Old Photo Archive எனும் ஃபேஸ்புக் பக்கத்தில் வைரலாகும் படத்தில் காணப்படும் கருப்பு வெள்ளை படத்தை பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.
இந்த பதிவில் “Photo courtesy- Renan Ahmed” (படம் உபயம் – ரெனான் அஹ்மது) என்று குறிப்பிடப்பட்டிருந்ததை தொடர்ந்து, அதனை அடிப்படையாக வைத்து நமது அடுத்தக்கட்ட தேடலை தொடங்கினோம்.
இதில் ரெனான் அஹ்மது என்பவர் அவரது பாட்டி ரோக்கியா அஹ்மது 25 ஆகஸ்ட், 2020 அன்று உயிரிழந்ததாகவும், அவருக்காக பிரார்த்திக்குமாறும் கூறி, ரோக்கியா அஹ்மத் பல்வேறு காலக்கட்டங்களில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்ததை கண்டறிந்தோம்.
அப்படங்களில் வைரலாகும் கறுப்பு வெள்ளை படம் 1961 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டு பகிரப்பட்டிருந்ததை காண முடிந்தது.

இப்படத்தின் கமெண்ட் செக்ஷனில், ‘Renan look what i found’ (ரெனான் இதை பார்) என்று குறிப்பிட்டு வைரலாகும் படத்தை ஒருவர் பகிர்ந்திருந்தார். அதற்கு ரெனான் இந்த படம் 2017 ஆம் ஆண்டு திரும்ப எடுக்கப்பட்டது என்று பதிலளித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து தேடியதில் ரோக்கியா அஹ்மத்தின் மருமகள் ரிஃபாத் அஹ்மத் என்பவர் நியூஸ் பங்களா 24 எனும் செய்தி சேனலுக்கு தந்த பேட்டியை காண முடிந்தது. அப்பேட்டியில், வைரலாகும் படத்திலிருப்பவர் நால்வரும் சுதந்திரப் போராட்ட வீரர்கள் அல்ல என அவர் தெரிவித்திருந்தார். அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சார்ந்தவர்கள் என்றும், அவர்கள் குடும்பத்தோடு வேட்டைக்கு சென்றபோது அப்படம் எடுக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
சமீபத்திய படம் குறித்து பேசுகையில், அப்படம் 2017 ஆம் ஆண்டு அவரது மகனின் திருமணத்தின்போது எடுக்கப்பட்டது என்று தெரிவித்திருந்தார்.
கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் தெளிவாகுவது என்னவென்றால்,
Also Read: மதுப்பிரியர்களுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ் வழங்கப்படும் என்று சென்னை மேயர் பிரியா அறிவித்ததாக பரவும் எடிட் செய்யப்பட்ட நியூஸ்கார்ட்!
1971ல் வங்கதேச சுதந்திர போரில் பங்குப்பெற்ற பெண்களின் படம் என்று சமூக வலைத்தளங்களில் பரவும் படம் தவறான படம் என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Facebook Post from Bangladesh Old Photo Archive, Dated July 19, 2013
Facebook Post from renan.ahmed.7, Dated August 26, 2020
Report from News Bagla 24, Dated March 31, 2021
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
February 14, 2023
Vijayalakshmi Balasubramaniyan
August 4, 2025
Ramkumar Kaliamurthy
December 29, 2021