சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024
சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024

HomeFact CheckViralமுழங்கால் சிகிச்சைக்காக கோவை சென்ற ஈபிஎஸ்... சசிகலா காலில் ஈபிஎஸ் விழுந்த படத்தை பயன்படுத்தியதா ஜூனியர்...

முழங்கால் சிகிச்சைக்காக கோவை சென்ற ஈபிஎஸ்… சசிகலா காலில் ஈபிஎஸ் விழுந்த படத்தை பயன்படுத்தியதா ஜூனியர் விகடன்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: முழங்கால் சிகிச்சைக்காக ஈபிஎஸ் கோவை சென்ற செய்தியில் சசிகலா காலில் ஈபிஎஸ் விழுந்த படத்தை பயன்படுத்தியது ஜூனியர் விகடன்.

Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டதாகும்.

முழங்கால் சிகிச்சைக்காக கோயம்புத்தூர் சென்றுவிட்டு மீண்டும் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டிற்கு திரும்பினார் எடப்பாடி பழனிசாமி! என்று குறிப்பிட்டு, சசிகலா காலில் ஈபிஎஸ் விழுந்த படத்துடன் ஜூனியர் விகடன் செய்தி வெளியிட்டதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

முழங்கால் சிகிச்சைக்காக ஈபிஎஸ் கோவை சென்ற செய்தியில் சசிகலா காலில் ஈபிஎஸ் விழுந்த படத்தை ஜூனியர் விகடன் பயன்படுத்தியதாக பரவும் நியூஸ்கார்ட்
Screenshot from Facebook/thoufeeq.dme

Archived Link

முழங்கால் சிகிச்சைக்காக ஈபிஎஸ் கோவை சென்ற செய்தியில் சசிகலா காலில் ஈபிஎஸ் விழுந்த படத்தை ஜூனியர் விகடன் பயன்படுத்தியதாக பரவும் நியூஸ்கார்ட்
Screenshot from Facebook/alkaf.salihmarecar

Archived Link

முழங்கால் சிகிச்சைக்காக ஈபிஎஸ் கோவை சென்ற செய்தியில் சசிகலா காலில் ஈபிஎஸ் விழுந்த படத்தை ஜூனியர் விகடன் பயன்படுத்தியதாக பரவும் நியூஸ்கார்ட்
Screenshot from Facebook/தமிழ்தாசன் மதுரை

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: ‘நான் வெற்றி பெற்ற பாஜக காரியகர்த்தா’ என்று அண்ணாமலைக்கு கிண்டலாக பதிலளித்தாரா ரவீந்திர ஜடேஜா?

Fact Check/Verification

முழங்கால் சிகிச்சைக்காக ஈபிஎஸ் கோவை சென்ற செய்தியில் சசிகலா காலில் ஈபிஎஸ் விழுந்த படத்தை ஜூனியர் விகடன் பயன்படுத்தியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

முன்னதாக வைரலாகும் நியூஸ்கார்டில் குறிப்பிட்டுள்ள 31/05/2023 அன்று ஜூனியர் விகடன் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.

இத்தேடலில் ஈபிஎஸ் முழங்கால் சிகிச்சைக்கு சென்றது குறித்து ஜூனியர் விகடன் செய்தி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. ஆனால் இச்செய்தியில் ஈபிஎஸ் காரிலிருந்து இறங்கும் படமே பயன்படுத்தப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் காண்கையில் வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகின்றது.

விகடன் ஆசிரியர்களுள் ஒருவரான பிரிட்டோவைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட குறித்து விசாரிக்கையில், அவரும் அந்த நியூஸ்கார்ட் போலியானது என உறுதி செய்தார்.

வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும், எடிட் செய்யப்பட்ட போலி நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

முழங்கால் சிகிச்சைக்காக ஈபிஎஸ் கோவை சென்ற செய்தியில் சசிகலா காலில் ஈபிஎஸ் விழுந்த படத்தை ஜூனியர் விகடன் பயன்படுத்தியதாக பரவும் நியூஸ்கார்ட்
Original Image
முழங்கால் சிகிச்சைக்காக ஈபிஎஸ் கோவை சென்ற செய்தியில் சசிகலா காலில் ஈபிஎஸ் விழுந்த படத்தை ஜூனியர் விகடன் பயன்படுத்தியதாக பரவும் நியூஸ்கார்ட்
Altered Image

Also Read: ஹேர் டிரையர் மற்றும் அயர்ன் பாக்ஸ் மூலமாக காய வைக்கப்பட்டதா அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியம்?

Conclusion

முழங்கால் சிகிச்சைக்காக ஈபிஎஸ் கோவை சென்ற செய்தியில் சசிகலா காலில் ஈபிஎஸ் விழுந்த படத்தை ஜூனியர் விகடன் பயன்படுத்தியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Image

Our Sources
Facebook Post From, Junior Vikatan, Dated May 31, 2023

Phone Conversation With I.Britto, Editor, Vikatan, Dated June 02, 2023

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular