திங்கட்கிழமை, ஜூலை 15, 2024
திங்கட்கிழமை, ஜூலை 15, 2024

HomeFact CheckViralகைலாஷ் மானசரோவர் யாத்திரையின் அரிதான காட்சி என்று பரவும் தவறான வீடியோ தகவல்!

கைலாஷ் மானசரோவர் யாத்திரையின் அரிதான காட்சி என்று பரவும் தவறான வீடியோ தகவல்!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக் காட்சி என்பதாக வீடியோ தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

Screenshot From Facebook/Skv Devar

குறிப்பிட்ட வீடியோ பதிவானது, “இந்த வீடியோ கயிலாய மலை மானசரோவர் பகுதியில் திபெத்-சீன எல்லையில்லுள்ள 18600 அடி மலை உச்சியில் அதிகாலை 3:30 மணிக்கு எடுக்கப்பட்டது. இயற்கையின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை!! கண் கொள்ளாத காட்சி” என்றும் பரவுகிறது.

Screenshot From Facebook/satheeshrajatuty

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் சிறுத்தைகள் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

Fact check/Verification

கைலாஷ் மானசரோவர் யாத்திரையின் அரிதான காட்சி என்று பரவும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம்.

Frame 1

முதலாவது ப்ரேமில் இருந்த புகைப்படத்தை Yandex ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது அந்த புகைப்படம் Minds என்கிற இணையப்பக்கத்திற்கு நம்மை இட்டுச் சென்றது. அதில், பிறைநிலா வடிவில் இருக்கும் நிலப்பரப்பு Blue moon Vallery, China என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Screengrab from minds.com

இதனைத் தொடர்ந்து, நாம் இதே புகைப்படத்தை ‘Blue moon valley’ மற்றும் ‘China’ என்கிற கீ-வேர்டுகளுடன் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்தபோது அது “Shutterstock” இணையதளத்தில் அப்புகைப்படம் நமக்குக் கிடைக்கச் செய்தது. குறிப்பிட்ட அந்த இடம் “Waterfall river mountain landscape, Blue Moon Valley, Lijiang, China” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. People’s Daily பக்கத்திலும் இது இடம்பெற்றிருந்தது.

Screenshot of tweet by @PDChina

இதனடிப்படையில், குறிப்பிட்ட வைரல் வீடியோவின் முதல் ப்ரேம் சீனாவின் யூனான் மாகாணத்தில் அமைந்துள்ள ஃப்ளூ மூன் வேலியாகும்; கைலாஷ் மானசரோவர் இல்லை என்பது உறுதியாகியது.

Frame 2

வைரல் வீடியோவின் இரண்டாவது ப்ரேமையும் Yandex ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது அது நம்மை Labuteny என்கிற பேஸ்புக் பக்கத்தில் இருந்த ஜனவரி 17, 2019 ஆம் ஆண்டு பதிவு ஒன்றிற்கு இட்டுச் சென்றது.

குறிப்பிட்ட அந்த பதிவில், இரண்டாவது ப்ரேம் thermal waterfall near Luoji Mountain in Sichuan, China என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து, Thermal Waterfall, Luoji Mountain, Sichuan, China உள்ளிட்ட கீ-வேர்டுகளைக் கொண்டு கூகுளில் தேடியபோது அது கடந்த ஏப்ரல் 19, 2019ல் பதிவிடப்பட்ட China Daily பேஸ்புக் பக்க பதிவிற்கு நம்மை இட்டுச் சென்றது. அதில், இரண்டாவது ப்ரேமில் உள்ள அதே புகைப்படம் இடம் பெற்றிருந்தது. “Enjoy a bit of luxury with a hot spring bath near a waterfall at Luoji Mountain in Liangshan county. #hotspring.” என்கிற பதிவுடன் அப்புகைப்படம் பதிவாகியிருந்தது.

Ifn.news இணையதளமும் இதனை South Xichang, Xiaochun City, Liangzhou District, Sichuan மாகாணத்தில் உள்ள Luoji Jiujiu Jiuli என்றே குறிப்பிட்டிருந்தது.

Frame 3

மூன்றாவது ப்ரேமை Yandex ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது அது Xinhuanet என்கிற இணையதளத்தில் இருந்த கட்டுரைக்கு நம்மை இட்டுச் சென்றது. அதில், வைரல் வீடியோவின் மூன்றாவது ப்ரேமில் உள்ள நீர்வீழ்ச்சியின் ஏரியல் வியூ புகைப்படம் இடம் பெற்றிருந்தது. அது தென்மேற்கு சீனாவின் யூனான் மாகாணத்தில் இருக்கும் Kunming நீர்வீழ்ச்சி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Screenshot of xinhuanet.com website

தொடர்ந்து, People’s Daily வெளியிட்டிருந்த ஜனவரி 26, 2019 ஆம் ஆண்டு ட்வீட் ஒன்றில் ”ஆசியாவின் மிகப்பெரிய மனிதர்களால் உருவாக்கப்பட்ட நீர்வீழ்ச்சி. தென்மேற்கு சீனாவின் யூனான் மாகாணத்தின் குன்மிங்கில் அமைந்துள்ள குன்மிங் நீர்வீழ்ச்சி” என்று பதிவிடப்பட்டுள்ளது.

Screenshot of tweet by @PDChina

Frame 4

“Dragon Head”, “water faucet,”& “mountains” உள்ளிட்ட கீ-வேர்டுகளை வைத்து கூகுளில் தேடியபோது அதன் முடிவில் People’s Daily China வெளியிட்டிருந்த செப்டம்பர் 24, 2021 ஆம் ஆண்டு வீடியோ ஒன்று நமக்குக் கிடைத்தது. குறிப்பிட்ட ப்ரேமில் இருக்கும் அதே நீர்வீழ்ச்சி போன்ற விஷூவல்கள் அதில் இருந்தன. அந்த வீடியோ, “Dragon waterfall! A giant dragon head “spews” water from a cliff in Longli County, southwest China’s Guizhou Province, forming a majestic waterfall for visitors.” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Screenshot of YouTube video by @PeoplesDaily

தொடர்ந்து, China Xinhua News பதிவிட்டிருந்த ஆகஸ்ட் 2, 2019 ஆம் ஆண்டு ட்வீட் நமக்குக் கிடைத்தது. “China’s “most impressive” water faucet, built on a cliff 60 metres above the ground in Guizhou.” என்று அதில் வீடியோ ஒன்று பதிவிடப்பட்டிருந்தது.

Screenshot of tweet by @XHNews

இதன்முடிவில், வைரல் வீடியோவில் உள்ள நீர்வீழ்ச்சியும், மேற்குறிப்பிட்ட ட்வீட் மற்றும் வீடியோவில் உள்ள நீர்வீழ்ச்சியும் ஒன்றே என்பது உறுதியானது.

(L-R) Screengrab from viral video and screengrab from tweet by @XHNews

Frame 5

கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு வைரல் வீடியோவின் ஐந்தாவது கீ-ப்ரேமை உட்படுத்தியபோது, அது நம்மை @manggatravel என்கிற பேஸ்புக் பக்கத்தின் மே 27, 2020 ஆம் ஆண்டு பதிவு ஒன்றிற்கு இட்டுச்சென்றது. அதில், வைரல் வீடியோவில் இருக்கும் அதே காட்சி, “Dali [Erhai] a paradise full of love stories. The Erhai Lake in Dali, Yunnan is really beautiful… (translated from Chinese)” என்கிற தலைப்புடன் இடம்பெற்றிருந்தது.

Screengrab from Facebook post by @manggatravel

மேலும், கடந்த ஜூன் 29, 2020 அன்று China Daily வெளியிட்டிருந்த யூனான் மாகாணத்தின் Erhai ஏரியின் வீடியோ இடம் பெற்றிருந்தது. இதன்முடிவில், வைரல் வீடியோவில் உள்ள இப்பகுதி, Erhai ஏரி என்பது உறுதியானது.

Screenshot of Facebook post by @chinadaily

Frame 6

வைரல் வீடியோவின் ஆறாவது ப்ரேமை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் முறைக்கு உள்ளாக்கியபோது அது நம்மை Debeste என்கிற இணையதளத்திற்கு இட்டுச் சென்றது. அதில், “Zhangjiajie in Spring.” என்கிற தலைப்புடன் வைரல் வீடியோவில் உள்ள அதே புகைப்படம் இடம்பெற்றிருந்தது.

Screenshot from debeste.de website

தொடர்ந்து, இதே தேடலில் Sabino Canyon இணையதளத்தில் வெளியாகியிருந்த கட்டுரையில் இடம்பெற்ற யூடியூப் வீடியோவிலும் அதே இடம் இடம்பெற்றிருந்தது.

China Daily பேஸ்புக் பக்கத்தில் ஆகஸ்ட் 22, 2019 ஆம் ஆண்டு இடம்பெற்றிருந்த வீடியோவிலும் “#GlamorChina Experience the peaceful life in Zhangjiajie, Central China’s Hunan province. #ChinaStory” என்கிற தலைப்பில் வைரல் வீடியோவில் உள்ள கீ-ப்ரேம் இடம் பெற்றிருந்தது.

Screenshot of Facebook post by @chinadaily

Frame 7

வைரல் வீடியோவின் ஏழாவது கீ-ப்ரேமை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது அது நம்மை William Huang என்கிற பக்கத்தின் செப்டம்பர் 10, 2018 ஆம் ஆண்டு பதிவிடப்பட்ட யூடியூப் பக்கத்திற்கு இட்டுச் சென்றது. அதில், ‘Huangguoshu waterfall.’ என்கிற தலைப்புடன் வைரல் கீ-ப்ரேமின் விரிவான வீடியோ இடம் பெற்றிருந்தது.

Screengrab from YouTube video by William Huang

மேலும், கடந்த ஜூலை 5, 2018 அன்று வெளியாகியிருந்த CNN கட்டுரை ஒன்றிலும் சீனாவின் Guizhou மாகாணத்தில் உள்ள Huangguoshu வீடியோ இடம்பெற்றிருந்தது.

(L-R) Screengrab from viral video and image published in CNN report

Frame 8

வைரல் வீடியோவின் 8வது ப்ரேமை Yandex ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது அது People’s Daily China வெளியிட்டிருந்த பேஸ்புக் பதிவிற்கு இட்டுச் சென்றது. அதில், வைரல் கீ-ப்ரேமில் உள்ள அதே புகைப்படம் “Feast your eyes on this endless colour green at Jinhu forest park in Huai’an, east China’s #Jiangsu province.” என்கிற தலைப்புடன் இடம் பெற்றிருந்தது.

Screenshot of Facebook post by @PeoplesDaily

Frame 9

வைரல் வீடியோவின் இந்த கீ-ப்ரேமை Yandex ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது அது Off Set பதிவிட்டிருந்த புகைப்படத்திற்கு இட்டுச் சென்றது. அதில், “Bamboo rafts on Li River, Yangshuo, Guangxi Province, China.” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

தொடர்ந்து, “Bamboo raft,” & “Li river” என்கிற கீவேர்டுகளை உபயோகித்து யூடியூபில் தேடியபோது மே 11, 2022 அன்று People’s Daily, China வெளியிட்டிருந்த வீடியோ ஒன்று கிடைத்தது. அதில்,வைரல் வீடியோவில் உள்ள ப்ரேமுடன் ஒத்துப் போகும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

Screengrab from YouTube video by @PeoplesDaily

இதனடிப்படையில், வைரல் வீடியோவில் உள்ள இடமும் நமக்குக் கிடைத்த முடிவில் உள்ள இடமும் ஒன்றே என்பது உறுதியானது.

(L-R) Screengrab from viral video and screengrab from YouTube video by @PeoplesDaily

Frame 10

வைரல் வீடியோவின் 10வது கீ-ப்ரேமை Yandex ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது அது நம்மை China Xinhua News, கடந்த ஜூன் 5, 2020ல் வெளியிட்டிருந்த ட்வீட் ஒன்றிற்கு இட்டுச் சென்றது. அதில் நமது வைரல் வீடியோவில் உள்ள அதே விஷூவல் இடம் பெற்றிருந்தது. “Heaven on Earth: Enjoy the breathtaking view of Mount Huangshan.” என்கிற தலைப்புடன் அப்பதிவு இடம் பெற்றிருந்தது.

Screengrab from tweet by @XHNews

UNESCO வெளியிட்டிருந்த மவுண்ட் Huangshan வீடியோவிலும் இதே நிலப்பரப்பு இடம்பெற்றிருந்தது.

Frame 11

Yandex ரிவர்ஸ் முறைக்கு 11வது கீ-ப்ரேமை உள்ளாக்கியபோது அது Tour Offer USA, என்கிற பேஸ்புக் பக்கத்தில் கடந்த ஏப்ரல் 29, 2019 அன்று “Straddling the border of China and Vietnam is this gorgeous set of converging waterfalls.” என்கிற தலைப்புடன் இடம்பெற்றிருந்த பதிவுக்கு நம்மை இட்டுச் சென்றது. தொடர்ந்து, அந்தப்பதிவு குறிப்பிட்ட நீர்வீழ்ச்சி, Ban-Gioc-Detain Falls என்று தெரிவித்திருந்தது.

Screenshot of Facebook post by @TourOfferUSA

இதன்முடிவில், நாம் வைரல் வீடியோ நீர்வீழ்ச்சியும் இதுவும் ஒன்றே என்று அறிந்து கொண்டோம்.

(L-R) Screenshot of viral video and screenshot of Facebook post by @TourOfferUSA

Frame 12

வைரல் வீடியோவின் இறுதியான 12ஆவது கீ-ப்ரேமை நாம் Yandex ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது People’s Daily China வெளியிட்டிருந்த ட்வீட் ஒன்றிற்கு அது இட்டுச் சென்றது. கடந்த ஏப்ரல் 26, 2019 ஆம் ஆண்டு இடப்பட்டிருந்த அந்த டிவிட்டர் பதிவில், “Scenery of #azalea flowers on the Guifeng mountain in Macheng, central China’s Hubei Province.” என்கிற தலைப்பில் வைரல் வீடியோவின் 12வது கீ-ப்ரேமை ஒத்திருந்த புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன.

Screenshot of tweet by @PDChina

தொடர்ந்து, பல்வேறு இணையதளங்கள் குறிப்பிட்ட ப்ரேமில் உள்ள விஷூவல்களில் இருப்பது Macheng-ல் உள்ள Guifeng சிகரத்தில் காணப்படும் Azalea பூக்கள் என்று குறிப்பிட்டுள்ளன. அதன் இணைப்புகளை இங்கே, இங்கே, மற்றும் இங்கே காணுங்கள்.

எனவே, இந்த வைரல் வீடியோ முழுவதுமே பல்வேறு இடங்களின் தொகுப்பு என்பது இதன்மூலம் தெளிவாகிறது.

Also Read: சபரிமலை அரவண பிரசாதம் தயாரிக்கும் இடத்தில் சிறுத்தை என்று பரவும் தவறான வீடியோ தகவல்!

Conclusion

கைலாஷ் மானசரோவர் யாத்திரையின் அரிதான காட்சி என்று பரவும் வீடியோ தகவல் தவறானது; அது பல்வேறு சுற்றுலா பகுதிகளின் தொகுப்பு என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Sources
Shutterstock
Minds.com
Twitter Account Of @PDChina
Facebook Post By Labuteny, Dated January 17, 2019
Facebook Account Of China Daily
Xinhuanet
Facebook Post By @manggatravel, Dated May 27, 2020
Facebook Account Of People’s Daily, China 
Alamy
Tweet By China Xinhua News, Dated June 5, 2020
Facebook Post By Tour Offer USA, Dated April 29, 2019
This Article First Written By Vasudha Beri In Newschecker English


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular