சனிக்கிழமை, ஜூலை 13, 2024
சனிக்கிழமை, ஜூலை 13, 2024

HomeFact CheckViralFact Check: நடிகர் அமிதாப் பச்சன் பகிர்ந்த மார்ச் 28 அன்று ஐந்து கோள்கள் ஒன்றிணைந்து...

Fact Check: நடிகர் அமிதாப் பச்சன் பகிர்ந்த மார்ச் 28 அன்று ஐந்து கோள்கள் ஒன்றிணைந்து காணப்பட்ட அரிய நிகழ்வு வீடியோ தகவல் உண்மையா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: ஐந்து கோள்கள் ஒன்றிணைந்து காணப்பட்ட மார்ச் 28ஆம் தேதியன்று நடந்த அரிய நிகழ்வு – அமிதாப் பச்சன்

Fact: வைரல் வீடியோவில் அருகருகில் காணப்படுவது வியாழன் கோள் மற்றும் அதனுடைய நிலவுகள் ஆகும். இது ஜனவரி 26 அன்று எடுக்கப்பட்டதாகும்.

நடிகர் அமிதாப் பச்சன் மார்ச் 28 அன்று ஐந்து கோள்கள் ஒன்றிணைந்து காணப்பட்ட அரிய நிகழ்வு என்று வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தளப்பங்களில் பகிர்ந்திருந்தார்.

Screenshot from Twitter @SrBachchan

“T 4600 – What A Beautiful Sight…! 5 Planets Aligned Together Today… Beautiful And Rare… Hope You Witnessed It too ..” என்று இந்த வீடியோவை அவர் பகிர்ந்திருந்தார்.

குறிப்பிட்ட வீடியோவை அமிதாப் பச்சனே எடுத்ததாக அவரைப் பாராட்டி பலரும் அதற்கு கீழ் பதிவிட்டு வருகின்றனர். அமிதாப் பச்சன் மட்டுமின்றி இந்த வீடியோ பலராலும் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகிறது.

Screenshot from Facebook/ramesh.lal.16

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: Fact Check: கணவருக்காக மனைவி கட்டிய குஜராத் ராணி-கி-வாவ் என்று பரவும் ராஜஸ்தான் ரணக்பூர் ஜெயின் கோவில் புகைப்படம்!

Fact Check/Verification

நடிகர் அமிதாப் பச்சன் பகிர்ந்த ஐந்து கோள்கள் ஒன்றிணைந்த அரிய காட்சி என்கிற வீடியோ குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

அமிதாப் பச்சன் பகிர்ந்த வீடியோ குறித்து ஆராய்ந்த போது கடந்த ஜனவரி 26 அன்று, Prathamesh Dalavi என்கிற யூடியூப் பயனாளர் தன்னுடைய யூடியூப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

அவர் அதில், “​Venus, Jupiter, Moon after 6:30pm. Telescope name:- Celestron inspire 100az I have taken help of AI that’s why planets are easily visible. Don’t ask me this in comments and it’s not an app” என்று பகிர்ந்திருந்தார். மேலும், Mars Visible at the top of the moon என்றும் குறிப்பிட்டுள்ளார். குறிப்பிட்ட வீடியோவில் நிலவு அதன் அருகில் காணப்படும் செவ்வாய், வியாழன் மற்றும் அதனுடைய முதல் 4 முக்கிய நிலவுகள் மற்றும் வெள்ளி கோளை AI மூலமாக எடிட் செய்து காட்டியுள்ளார் Prathamesh.

கீழே கமெண்ட் பகுதியில், “It was the first time I see a video where a telescope zooms in to Jupiter and it’s moons. That was beautiful to see.” என்று ஒருவர் பதிவிட்ட பகுதியை லைக் செய்துள்ள அவர், அதற்கு “But it’s made with AI after shooting the scene” என்றும் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பாகவும் பல்வேறு வானியல் சார்ந்த வீடியோக்களை பகிர்ந்துள்ளார் இவர்.

இதன்மூலம், குறிப்பிட்ட வீடியோவில் தெளிவாக இருப்பது வியாழன் கிரகமும் அதனுடைய நிலவுகளான Lo, Europa, Ganymede மற்றும் Callisto என்பது தெரிய வருகிறது.

மார்ச் 28 அன்று, புதன்,வியாழன், வெள்ளி, செவ்வாய் மற்றும் யுரேனஸ் ஆகிய கோள்கள் நிலவுடன் ஒன்றிணைந்திருந்த நிகழ்வு The Virutual Telescope Project, Space.com, EarthSky ஆகியோரால் பகிரப்பட்டுள்ளது. அதற்கும், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் பகிர்ந்துள்ள வீடியோவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதும் உறுதியாகிறது. வைரல் வீடியோ கடந்த ஜனவரி 26ஆம் தேதியன்றே எடுக்கப்பட்டது என்பது தெளிவாகிறது. மேலும், ஐந்து கோள்கள் ஒன்றிணைந்து காணப்பட்ட நிகழ்வு கடந்த ஜூன் 2022லும் நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read: செவ்வாய் கிரகத்தில் 32000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மங்கள்நாத் கோயில் என்று பரவும் படம் உண்மையானதா?

Conclusion

நடிகர் அமிதாப் பச்சன் பகிர்ந்த ஐந்து கோள்கள் அருகருகே அமைந்த நிகழ்வு என்கிற வீடியோவில் தெளிவாக அருகருகே தெரிவது வியாழன் மற்றும் அதனுடைய நிலவுகள் என்பதும், குறிப்பிட்ட வீடியோ மார்ச் 28ஆம் தேதியன்று ஐந்து கோள்கள் ஒன்றிணைந்த அபூர்வ நிகழ்வில் எடுக்கப்பட்டதல்ல என்பதும் நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
YouTube Video From, Prathamesh Dalavi, Dated January 26, 2023
Report From, Space.com, Dated March 28, 2023
Report From, Axois, Dated March 28, 2023
Report From, CBS News, March 28, 2023
YouTube Video From, The Virtual Telescope Project, Dated March 28, 2023
Report From, EarthSky, Dated March 28, 2023
Report From, The Indian Express, Dated June 28, 2022


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular