செவ்வாய் கிரகத்தில் 32000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மங்கள்நாத் கோயில் என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா, அங்கு உயிரினங்கள் ஏதேனும் வாழ்கிறதா என்பது குறித்து உலகெங்கிலும் உள்ள விண்வெளி விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அமெரிக்காவின் நாசா (NASA) நிறுவனம் மேற்குறிப்பிட்ட ஆய்வுகளை செய்ய பெர்சவரன்ஸ் ரோவர் (Perseverance Rover) என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி வைத்தது.
கடந்த மார்ச் மாதம் இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய நிலையில், இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தில் இருந்த 32000 ஆண்டுகள் பழமையான மங்கள்நாத் கோயிலை படம் பிடித்து அனுப்பியதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



Also Read: பிரதமர் மோடி வாடிகனில் வாடகை காரில் பயணம் செய்ததாக வதந்தி!
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact check/ Verification
செவ்வாய் கிரகத்தில் 32000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மங்கள்நாத் கோயில் என்று கூறி சமூக வலைத்தளங்களில் வைரலாகும் படத்தில் காணப்படும் மங்கள்நாத் கோயிலை காட்டிலும் ரோவர் விண்கலம் பெரியதாக உள்ளது. இதை காணும்போதே இப்படம் போலியாக எடிட் செய்யப்பட்டதுதான் என்பதை உணர முடிகின்றது.
இருப்பினும் இதை பலர் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருவதால், இப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து அறிய, இப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம். இதில் வைரலாகும் படம் போலியாக எடிட் செய்யப்பட்டதுதான் என்பதை தெளிவாக அறிய முடிந்தது.
செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட ரோவர் விண்கலம் கடந்த ஏப்ரல் மாதம் (ஏப்ரல் 29) சாண்டா குரூஸ் எனும் மலையை படம் பிடித்து அனுப்பியுள்ளது.

இந்தப் படத்துடன் உஜ்ஜைன் மங்கள்நாத் கோயிலின் படத்தையும், ரோவர் விண்கலத்தின் படத்தையும் இணைத்தே, மேற்கண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்றது.
Also Read: புனித் ராஜ்குமார் மயங்கி விழுந்த கடைசி நிமிட சிசிடிவி காட்சி என்று பரவும் தவறான வீடியோ!
Conclusion
செவ்வாய் கிரகத்தில் 32000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மங்கள்நாத் கோயில் என்று கூறி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகும் படம் போலியாக எடிட் செய்யப்பட்டது என்பதனை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Altered
Our Sources
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)