Fact Check
திமுக தற்போதைய ஆட்சியில் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வீல்சேர் என்று பரவும் பழைய புகைப்படம்!
Claim: திமுக ஆட்சியில் அரசு மருத்துவமனை வீல்சேர்.
Fact: வைரலாகும் புகைப்படம் அதிமுக ஆட்சி காலத்தில் எடுக்கப்பட்டதாகும்.
திமுக ஆட்சியில் அரசு மருத்துவமனையில் வீல் சேரின் நிலைமை என்பதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”திருநல்வேலி அரசு மருத்துவமனை s 4 வார்டில் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யபட்ட வீல் சேர் அருமை” என்கிற வாசகத்துடன் ”ஆமாம்மா..எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு இணையா திருநெல்வேலி ஆஸ்பத்திரியும் இருக்குதுன்னு ஊருக்குள்ளே பேசிக்குறாங்க” என்று இப்புகைப்படம் பரவி வருகிறது. தற்போதைய ஆட்சியில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதாக அர்த்தம் தொனிக்கும் வகையில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: கர்நாடகாவில் ரயிலை கவிழ்க்க சதியா? வைரலாகும் வீடியோவின் உண்மை பின்னணி!
Fact Check/Verification
திமுக தற்போதைய ஆட்சியில் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வீல்சேர் என்று பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியதுடன் அதில் உள்ள வாசகங்களை வைத்து சமூக வலைத்தளங்களில் தேடியபோது கடந்த செப்டம்பர் 2017 ஆம் ஆண்டு Navas Sahul என்பவர் இப்புகைப்படத்தைப் பதிவிட்டிருந்தார்.
வைரலாகும் புகைப்படத்தில் இருக்கும் மருத்துவமனையின் விவரங்களைத் தெளிவாக அறிய முடியாவிட்டாலும் தற்போது பரவும் புகைப்படம் கடந்த 2017ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதை இதன்மூலம் நம்மால் அறிந்து கொள்ள முடிந்தது.
Also Read: Fact Check: முகமது ஷெரீப் அகமது என்ற பெயர் கொண்ட ஒடிசா ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டர் தலைமறைவா?
Conclusion
திமுக தற்போதைய ஆட்சியில் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வீல்சேர் என்று பரவும் புகைப்படம் கடந்த 2017ஆம் ஆண்டு முதலே பரவி வருகிறது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Missing Context
Our Sources
Facebook Post from Navas Shahul, Dated September 11, 2017
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)