ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact CheckViralசமீபத்திய அமெரிக்க பனிப்புயலின் 48 மணி நேரக் காட்சி என்று பரவும் 2016 ஆம் ஆண்டு...

சமீபத்திய அமெரிக்க பனிப்புயலின் 48 மணி நேரக் காட்சி என்று பரவும் 2016 ஆம் ஆண்டு வீடியோ!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

சமீபத்திய அமெரிக்க பனிப்பொழிவின் வேகத்தைக் காட்டும் காணொளி என்பதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Screenshot from Twitter @SundarrajanG

கனடா மற்றும் அமெரிக்காவில் ஏற்பட்ட கடுமையான பனிப்புயல் காரணமாக கிட்டதட்ட 250 மில்லியன் மக்கள் பாதிப்படைந்தனர். 1.5 மில்லியன் மக்களுக்கு மின்சார சேவை துண்டிக்கப்பட்டதுடன், ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் சேவையை தற்காலிகமாக நிறுத்தியது.

இந்நிலையில், அமெரிக்காவையே உலுக்கிய இந்த பனிப்புயல் குறித்து பல்வேறு வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. அந்த வகையில், “நியூயார்க் மாகாணத்தில் உள்ள பப்பலோ நகரத்தில் 48 மணிநேரத்தில் நடந்த கடும் பனிப்பொழிவை காட்டும் 60வினாடி காணொளி. இந்த பனிப்பொழிவால் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.” என்பதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

சூழல் ஆய்வாளரான ஜி.சுந்தரராஜன் என்பவர் உட்பட பலரும் இதனை தங்களது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

Screenshot From Twitter @SundarrajanG
Screenshot from Facebook/azhaganarakshasi
Screenshot from Facebook/kumar.ramasamy.52

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: இந்து கோயில்களில் முறைகேடு செய்ததாக வழக்கிட்ட ரங்கராஜன் நரசிம்மன் திமுகவினரால் தாக்கப்பட்டாரா?

Fact Check/Verification

சமீபத்திய அமெரிக்க பனிப்புயலின் 48 மணி நேரக் காட்சி 60 நொடிகளில் என்பதாகப் பரவுகின்ற வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து அறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

குறிப்பிட்ட வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து கூகுள் ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம். அதன் முடிவில், www.9gag.com என்கிற இணையதளத்தில் கடந்த டிசம்பர் 9, 2018 ஆம் ஆண்டு இந்த வீடியோ பதிவிட்டிருப்பது நமக்குக் காணக்கிடைத்தது.

Reddit இணையத்தளத்திலும் இந்த வீடியோ மூன்று வருடங்களுக்கு முன்பு பகிரப்பட்டுள்ளது. மேலும், கீவேர்ட் சர்ச் மூலமாக தேடியபோது, Worse than chiggers என்னும் யூடியூப் சேனல் ஒன்றில் கடந்த ஜனவரி 25, 2016 ஆம் ஆண்டு “The blizzard of 2016 in 1 minute. Northern Virginia January 22 -24, 2016.” என்று பதிவிடப்பட்டுள்ளது.

தொடர் தேடலில், Daily mail செய்தித்தளத்திலும் “The one-minute-long video comprises 48 hours of Storm Jonas as Herndon, North Virginia was buried by the blizzard. According to the filmmaker, the camera was set up on the front porch and captured one frame every 30 seconds between January 22 and 24” என்று இந்த வீடியோ விளக்கமாகப் பதிவிடப்பட்டுள்ளது.

Also Read: இந்திய எல்லையில் எலுமிச்சை, மிளகாயை கட்டினாரா ராஜ்நாத் சிங்?

Conclusion

சமீபத்திய அமெரிக்க பனிப்புயலின் 48 மணி நேரக் காட்சி 60 நொடிகளில் என்பதாகப் பரவுகின்ற வீடியோ கடந்த 2016 ஆம் ஆண்டு என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Partly False

Sources

Video by YouTube Channel Worse Than Chiggers, Dated Jan 25, 2016
Report by Daily Mail, Dated Jan 27, 2016


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular