திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024
திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

HomeFact CheckViralWeekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

அவற்றில் சிறந்த ஐந்து செய்திகள் உங்கள் பார்வைக்காக:

பாஜக உத்தேச வேட்பாளர் பட்டியல் என பரவும் வதந்தி

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களின் உத்தேச வேட்பாளர் பட்டியல் என கூறி பட்டியல் ஒன்று ஊடகங்களில் பரவி வருகின்றது. ஆனால் இது தவறானத் தகவலாகும்.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

கிணத்துக்கடவு தொகுதியில் இறந்தவருக்கு சீட்டு தந்ததா அதிமுக?

கிணத்துக்கடவு தொகுதியில் ஏற்கனவே இறந்த ஒருவருக்கு அதிமுக சார்பில் போட்டியிட சீட்டு அளிக்கப்பட்டதாக தகவல் ஒன்று  சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. ஆனால் இது தவறானத் தகவலாகும்

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

சீமான் பாஜகவினருடன் ரகசிய ஒப்பந்தமிட்டாரா?

சீமான் அவர்கள் பாஜகவினரை சந்தித்து ரகசிய ஒப்பந்தமிட்டதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. ஆனால் இது தவறானத் தகவலாகும்.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

மு.க.ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தேர்தல் வாக்குறுதிகளாக இப்படிச் சொன்னார்களா?

மு.க.ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தேர்தல் வாக்குறுதிகளாக முறையே திருமணம் செய்து துன்பத்தை அனுபவிப்பவற்கு இலவசமாக விவாகரத்து வாங்கித் தரப்படும்; இளைஞர்களுக்கு ஒரு வருடத்திற்குள் திருமணம் செய்து வைக்கப்படும் என்று கூறியதாகப் பரவும் நியூஸ் கார்டு சித்தரிக்கப்பட்டதாகும்.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

எல்.முருகன் பசுக்களுக்கு உதவித்தொகை வழங்க ஸ்டாலின் தயாரா என்று கேட்டாரா?

பாஜக தமிழகத் தலைவரான எல்.முருகன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை வழங்குவதற்கு பதிலாக பசுக்களுக்கு வழங்கத் தயாரா என்று கேட்டதாகப் பரவும் புகைப்படம் தவறானதாகும்.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular