ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 3, 2024
ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 3, 2024

HomeFact CheckPoliticsசீமான் பாஜகவினருடன் ரகசிய ஒப்பந்தமிட்டாரா?

சீமான் பாஜகவினருடன் ரகசிய ஒப்பந்தமிட்டாரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பாஜகவினரை சந்தித்து ரகசிய ஒப்பந்தமிட்டதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

சீமான் குறித்து பரவும் தகவல்
Source: Twitter

Archive Link:https://archive.ph/LoyLi

தமிழர்களை தமிழர்கள்தான் ஆள வேண்டும் என்ற கொள்ளையோடு அரசியல் களத்தில் குதித்தவர் சீமான்.  2010 ஆம் ஆண்டு ஒரு சிறிய கட்சியாக தொடங்கப்பட்ட நாம் தமிழர் கட்சி, இன்று தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் எந்த ஒரு கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிடும் வல்லமை பெற்றுள்ளதற்கு இவரின் சொல்வண்மையும் முக்கிய காரணமாகும்.

சீமான் அவர்கள் மத்தியில் ஆளும் பாஜகவை மிகவும் கடுமையாக விமர்சித்து வருபவர். தமிழகத்தில் ஆளுங்கட்சி செய்யும் தவறுகளுக்கும் பாஜகதான் மூலக் காரணம் என்று பல மேடைகளில் பேசியுள்ளார்.

அண்மையில் கூட ஒரு பேட்டியில்,  பாஜக அவரை கட்சியில் சேர வற்புறுத்தியதாகவும், எம்.பி. பதவி தருவதாகக் கூறி ஆசைக் காட்டியாதாகவும் இவர் கூறினார்.

தன்னை எப்போதும் பாஜகவுக்கு எதிரியாகவே காட்டிக்கொண்டிருந்த சீமான் அவர்கள், பாஜகவினரை சந்தித்து, அவர்களுடன் ரகசிய ஒப்பந்தம் ஒன்றை போட்டதாக கூறி பதிவு ஒன்று வலைத்தளங்களில் பரப்பப்படுகின்றது. இப்பதிவுடன் புகைப்படம் ஒன்றும் இணைக்கட்டுள்ளது.

அப்புகைப்படத்தில் சீமானுடன் பாஜகவைச் சேர்ந்த வானதி சீனிவாசன், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் ஆகியோர் காணப்படுகின்றனர்.

இஸ்லாமியத் தலித்துகளின் ஓட்டைப் பிரித்து, பாஜகவை வெற்றி செய்ய வைப்பதற்கான பேச்சுவார்த்தை நடத்தவே இச்சந்திப்பு நடைப்பெற்றதாக அப்பதிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Twitter

Archive Link: https://archive.ph/0ixZm

Source: Twitter

Archive Link:https://archive.ph/yhaug

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, வைரலாகும் புகைப்படம் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

சீமான் அவர்கள் பாஜகவினருடன் ரகசிய ஒப்பந்தம் செய்ததாக கூறப்படும் தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய,  சமூக வலைத்தளங்களில்  வைரலாகும் அப்புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறையில் ஆய்வு செய்தோம்.

இவ்வாறு ஆய்வு செய்தததில் இப்புகைப்படமானது 2017 ஆம் ஆண்டே சமூக ஊடகங்களில் பரவியுள்ளது என்பதை நம்மால் அறிய முடிந்தது.  2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 ஆம் தேதி அன்று Left Wings எனும் ஃபேஸ்புக் பக்கத்தில் இப்புகைப்படம் பதிவிடப்பட்டுள்ளது.

சீமான் குறித்து பரவும் தகவலின் உண்மைத்தன்மை
Source: Facebook

இதன்படி பார்க்கையில் பாஜகவுடன் சீமான் அவர்கள் ரகசிய ஒப்பந்தமிட்டதாக பரவும் தகவல் தவறான ஒன்று என்பது நமக்கு உறுதியாகியது. ஆயினும் சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம் எந்த தருணத்தில்  எடுக்கப்பட்டது என்பதை அறிய இதுக்குறித்து தேடினோம்.

நியூஸ் 7 தொலைக்காட்சி  2017 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று சிறப்பு பட்டிமன்றம் ஒன்றை சென்னை சாய்ராம் கல்லூரியில் நடத்தியது.

இந்த பட்டிமன்றத்தில் நாஞ்சில் சம்பத், சீமான், வானதி சீனிவாசன், அர்ஜூன் சம்பத், ராசி அழகப்பன், நடிகர் மயில்சாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இப்பட்டிமன்றத்திற்கு நடுவராக தமிழ் கடல் நெல்லை கண்ணன் அவர்கள் திகழ்ந்தார்.

இந்நிகழ்வின்போது எடுக்கப்பட்ட புகைப்படமே தற்போது சமூகவலைத்தளங்களில் தவறானத் தகவலுடன் பரப்பப்படுகின்றது. வைரலாகும் புகைப்படத்தில் சாய்ராம் கல்லூரியின் ஸ்டிக்கர் இடம்பெற்றிருப்பதை வாசகர்களுக்கு வட்டமிட்டுக் காட்டியுள்ளோம்.

சீமான் குறித்து பரவும் தகவலின் உண்மைத்தன்மை குறித்த ஆதாரம்
Source: Twitter

மேலும் வாசகர்களின் புரிதலுக்காக இவர்கள் கலந்துக்கொண்ட பட்டிமன்றத்தின் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Courtesy: News 7 Tamil

Conclusion

சீமான் அவர்கள்  பாஜகவினரை சந்தித்து ரகசிய ஒப்பந்தமிட்டதாக கூறி சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல் தவறானது என்பதையும், அர்ஜூன் சம்பத் மற்றும் வானதி சீனிவாசனுடன்  சீமான் இருக்கும் புகைப்படம் 2017 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட பழையப் புகைப்படம் என்பதையும் உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Misleading

Our Sources

Twitter Profile: https://twitter.com/GeoEdmen/status/1370212120168570883

Twitter Profile: https://twitter.com/dhanasegarans/status/1370061309354504192

Left Wing (Facebook Profile): https://www.facebook.com/leftwings.madhi/posts/2011615622450038

News 7 Tamil: https://www.youtube.com/watch?v=_N-TILUd49g

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular