வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26, 2024
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26, 2024

HomeFact Checkஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது தந்தை வீட்டில் என்று பரவும் தவறான வீடியோ தகவல்!

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது தந்தை வீட்டில் என்று பரவும் தவறான வீடியோ தகவல்!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது தந்தை வீட்டில் என்பதாக வீடியோவுடன் கூடிய தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

குறிப்பிட்ட பதிவில், “இந்திய தேசத்தின் நிதி அமைச்சர் தன் தந்தையுடன் அவரது வீட்டில். வீட்டை கவனியுங்கள். நம் ஊரில் சாதாரண கவுன்சிலர் பதவியில் இருப்பவர்களின் வீட்டை எண்ணிக் கொள்ளுங்கள்.” என்பதாகப் பரவுகிறது.

Screenshot from Twitter @RgPjb

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: பாரத் ஜோடோ யாத்திரையின் நடுவில் சிக்கனுடன் மது அருந்தினாரா ராகுல் காந்தி? உண்மை என்ன?

Fact Check/Verification

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது தந்தை வீட்டில் என்று பரவும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

குறிப்பிட்ட வீடியோ தகவல், ஆங்கிலத்தில் வைரலாகிய நிலையில் கடந்த ஜனவரி 9, 2023 அன்றே நாம் இதுகுறித்த உண்மையறியும் சோதனையை ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளோம்.

அதன்படி, குறிப்பிட்ட வீடியோவில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் இருக்கும் வயதானவர், மகாகவி பாரதியாரின் வம்சாவழியைச் சேர்ந்த 96 வயதான கே.வி.கிருஷ்ணன் என்பது தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த பதிவை தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “Visited Siva Madam in Varanasi yesterday and interacted with the family members of Mahakavi Bharathiyar, including his 96-year-old great nephew Shri K. V. Krishnan.” என்று பதிவிட்டுள்ளார்.

Instagram will load in the frontend.

டிசம்பர் 3, 2022 அன்று அவரது ட்விட்டர் பக்கத்தில், மகாகவி பாரதியார் குடும்பத்தினரை வாரணாசியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்த புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.


Also Read:
 
கொடநாடு பெயரை கேட்டவுடன் சட்டசபையை விட்டு வெளியேறினாரா எடப்பாடி பழனிசாமி?

Conclusion

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது தந்தை வீட்டில் என்று பரவும் வீடியோ தகவல் தவறானது; அது மகாகவி பாரதியார் குடும்பத்தினரை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்த வீடியோ என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Sources
Factcheck Article, By Newschecker english, Dated January 09, 2023
Instagram Post By Nirmala Sitharaman, Dated December 4, 2022
Tweet By @nsitharamanoffc, Dated December 3, 2022


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular