திங்கட்கிழமை, ஜூலை 15, 2024
திங்கட்கிழமை, ஜூலை 15, 2024

HomeFact Checkஅர்ஜூன் எம்கே 1 ஏ பீரங்கி சென்னை பாதுகாப்பு தொழில் வழித்தடத்தில் உருவாக்கப்பட்டதா?

அர்ஜூன் எம்கே 1 ஏ பீரங்கி சென்னை பாதுகாப்பு தொழில் வழித்தடத்தில் உருவாக்கப்பட்டதா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

அர்ஜூன் எம்கே 1 ஏ பீரங்கி  சென்னை பாதுகாப்பு தொழில் வழித்தடத்தில் உருவாக்கப்பட்டது என்று சமூக வலைத்தளங்களில் தகவல் ஒன்று பரவி வருகின்றது.

அர்ஜூன் எம்கே 1 ஏ பீரங்கி குறீத்த ஹெச்.ராஜா  பதிவு
Source: Facebook

Fact Check/Verification

தமிழ்நாட்டில் பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைப்பதற்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேற்று( 14/02/2020) சென்னை வந்தார்.  அதில் ஒன்றாக அர்ஜூன் பீரங்கி(எம்கே-1ஏ)-யை ராணுவத்திடம் ஒப்படைத்தார்.

இதுக்குறித்த  செய்தியை இங்கே, இங்கே மற்றும் இங்கே படிக்கலாம்.

பிரதமர் ராணுவத்திடம் ஒப்படைத்த அர்ஜூன் எம்கே 1 ஏ பீரங்கி பீரங்கி  சென்னை பாதுகாப்பு தொழில் வழித்தடத்தில் உருவாக்கப்பட்டது என்று தமிழக பாஜகவின் மூத்தத் தலைவர் ஹெச்.ராஜா சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

https://www.facebook.com/HRajaBJP/posts/3579868422130482

Archive Link: https://archive.vn/bi6eR

ஹெச்.ராஜா தெரிவித்த இதே கருத்தை மேலும்  சிலரும் சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளனர்.

https://www.facebook.com/ramesh.subrmanian.3/posts/10158288905243983

Archive Link: https://archive.vn/4BzKR

https://www.facebook.com/justin.nadar.37/posts/2140433946091240

Archive Link: https://archive.vn/C1o7K

ஹெச்.ராஜா உள்ளிட்டோர் சமூக  வலைத்தளங்களில்  பரப்பும் இத்தகவலின் பின்னணியில் இருக்கும் உண்மைத்தன்மை குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

உண்மையும் பின்னணியும்

நாட்டின் இரண்டு இடங்களில் பாதுகாப்புத் தொழில் வழித்தடம் அமைக்கப்படும் என்று  பட்ஜெட் (2018-19) உரையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் ஒரு தொழில் வழித்தடமும், உத்தரப்பிரதேசத்தில் ஒரு தொழில் வழித்தடமும் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், ஓசூர், திருச்சி, சேலம் என ஐந்து இடங்களில் பாதுகாப்பு தொழில் வழித்தடம் அமைக்க இடம் அடையாளம் காணப்பட்டது

இதன்படி சென்னையில் அமைக்கப்பட்ட தொழில் வழித்தடத்தில் உருவாக்கப்பட்ட அர்ஜூன் எம்கே 1 ஏ பீரங்கியையே பிரதமர் மோடி நேற்று ராணுவத்திற்கு ஒப்படைத்தார் என்று ஹெச்.ராஜா உள்ளிட்டோர் பரப்பி வருகின்றனர். இவர்கள் பரப்பி வரும் இக்கருத்தின் உண்மைத்தன்மை குறித்து அறிய இதுக்குறித்து தீவிரமாக தேடினோம்.

நம் தேடலில் இந்த தொழில் வழித்தடம் உருவாக்கம் குறித்து மத்திய பாதுகாப்புத் துறை வெளியிட்ட செய்தி அறிக்கை ஒன்றை நம்மால் காண முடிந்தது. இந்த அறிக்கையானது, 02/03/2020 அன்று வெளியிடப்பட்டிருந்தது.

PIB-யின் செய்தி அறிக்கை
Source: PIB

இந்த அறிக்கையின்படி பார்க்கையில் 11 மாதங்களுக்கு முன்பு வரை, அதாவது 02/03/2020 வரை பாதுகாப்பு தொழில் வழித்தடமானது தொடங்கப்படவே இல்லை என்பது நமக்கு தெளிவாகின்றது.

ஒருவேளை இதற்குப்பின் இத்தடம் ஆரம்பித்து அதன்பின் இந்த பீரங்கி அங்கே உருவாக்கி இருக்கலாம் எனும்  சந்தேகம் வாசகர்களுக்கு ஏற்படலாம்.

இதை தெளிவு செய்வதற்காக இத்தடத்தின் தற்போதையை நிலை குறித்து தேடினோம்.

நம் தேடலில் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ஜனவரி 5, 2021-யில் வெளிவந்த ஒரு செயதியை நம்மால் காண முடிந்தது. அதில் பாதுகாப்பு தொழில் தடம் தொடங்குவதற்கான இடம் தேர்வு குறித்த செய்தி ஒன்றை நம்மால் காண முடிந்தது.

இச்செய்தியின்படி பார்க்கையில் கடந்த மாதம் வரை இத்தொழில் தடம் தொடங்கப்படவில்லை என்பது நமக்கு தெளிவாகியது.

அச்செய்தியைப் படிக்க: https://timesofindia.indiatimes.com/city/coimbatore/pvt-firm-ready-to-provide-400-acres-for-defence-corridor/articleshow/80104221.cms

இதன்படி பார்க்கையில் அர்ஜூன் எம்கே 1 ஏ பீரங்கி  சென்னை பாதுகாப்பு தொழில் வழித்தடத்தில் உருவாக்கப்பட்டது என்று ஹெச்.ராஜா அவர்கள் தெரிவித்த செய்தி முற்றிலும் தவறானது என்பது உறுதியாகிறது.

இதன்பின் உண்மையில் இப்பீரங்கி எங்கு உருவாக்கப்பட்டது என்பதைத் தேடினோம்.

நம் தேடலில் DRDO-வின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த பதிவு ஒன்றை நம்மால் காண முடிந்தது.

அப்பதிவில்,

சென்னை நடக்கவிருக்கும் விழாவில் DRDO தயாரித்த அர்ஜூன் எம்கே 1 ஏ பீரங்கியை பிரதமர் நரேந்திர மோடி ராணுவத் தலைவருக்கு  அர்ப்பணித்தார்”

என்று  பதிவிடப்பட்டிருந்தது.

Source: Twitter

மேற்கண்ட பதிவைக் காணும்போது அர்ஜூன் எம்கே 1 ஏ பீரங்கியானது சென்னை DRDO-வில் உருவாக்கப்பட்டுள்ளது எனும் உண்மை நமக்கு தெளிவாகிறது.

Conclusion

அர்ஜூன் எம்கே 1 ஏ பீரங்கி  சென்னை பாதுகாப்பு தொழில் வழித்தடத்தில் உருவாக்கப்பட்டது என்று ஹெ.ராஜா உள்ளிட்டோர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட தகவல் தவறானதாகும். உண்மையில் இது சென்னை DRDO-வில் உருவாக்கப்பட்டதாகும்.

இத்தகவலை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources

H.Raja: https://www.facebook.com/HRajaBJP/posts/3579868422130482

PIB: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1578752

Times Of India: https://timesofindia.indiatimes.com/city/coimbatore/pvt-firm-ready-to-provide-400-acres-for-defence-corridor/articleshow/80104221.cms

DRDO: https://twitter.com/DRDO_India/status/1360853915076423684


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular