செவ்வாய்க்கிழமை, ஜூன் 18, 2024
செவ்வாய்க்கிழமை, ஜூன் 18, 2024

HomeFact Checkதிராவிட முன்னேற்றக் கழகம் எனும் பெயர் திருடப்பட்டதா?

திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பெயர் திருடப்பட்டதா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பெயரும் உதய சூரியன் எனும் சின்னமும் பர்மா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து திருடியதாக பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

திராவிட முன்னேற்றக் கழகம் குறித்துப் பரப்பப்படும் செய்தி
பரப்பப்படும் செய்தி.

Fact Check/Verification

திராவிட முன்னேற்றக் கழகம் தனது கட்சியின்  பெயரையும், கட்சியின் சின்னமான உதய சூரியனையும் பர்மா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து திருடியதாக பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

பரவும் இச்செய்தியின் உண்மைத் தன்மைக் குறித்து அறிய நியூஸ் செக்கர் சார்பில் இதை ஆராய முடிவெடுத்தோம்.

உண்மை என்ன?

சமூக வலைத் தளங்களில் இச்செய்திக் குறித்துப் பரப்பும்போது, பர்மா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடையாள அட்டையின் புகைப்படத்தையும் சேர்த்து  பகிர்ந்து வருகின்றனர்.

திராவிட முன்னேற்றக் கழகம் திருடியதாக கூறும் பதிமுகவின் அடையாள இதழ்
பதிமுகவின் அடையாள இதழ்

அந்த அடையாள அட்டையில் “துவக்கம் 1950” எனும் வாசகம் இருப்பதை நம்மால் காண முடிகிறது. இதன்மூலம் பர்மா திராவிட கழகம் 1950 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது என்பது உறுதியாகிறது.

ஆனால் திமுகவானது இதற்கு முன்பே,   1949 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதியே தொடங்கப்பட்டது.  இத்தகவல்  திமுகழகத்தின் அதிகாரப் பூர்வ இணையத் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திராவிட முன்னேற்றக் கழகப் பொதுக்கூட்டம்.
திமுக பொதுக்கூட்டம்.

மேலும், இந்து தமிழ் திசை, “திமுக கடந்து வந்த பாதையும், தலைவர் பதவியும் ஒரு பார்வை” என்றத் தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது. இதிலும் திமுக 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதிதான் தொடங்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

திராவிட முன்னேற்றக் கழகம் குறித்து இந்துத் தமிழில் வந்தச் செய்தி.
இந்துத் தமிழ் செய்தி.

இதன்மூலம் திமுக, பதிமுகவுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டது என்பதை தெளிவாக உணர முடிகிறது.

உண்மையில், பர்மா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது திமுகவின் கிளைக் கழகமே. 1950களில் பர்மாவில் தமிழர்கள் பெருமளவில் வாழ்ந்தனர். அவர்களாலேயே இக்கட்சி நடத்தப்பட்டது.

1954 ஆம் ஆண்டு பர்மாவில் அனைத்துலக புத்த மாநாடு நடைப்பெற்றது. அதில் டாக்டர் அம்பேத்கர், பெரியார் உள்ளிட்டத் தலைவர்களும் கலந்துக் கொண்டனர்.

அப்போது அக்காலக்கட்டத்தில் பர்மா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக இருந்தவர் நாரா. நாச்சியப்பன். அவர் இம்மாநாடு காலத்தில் பெரியாருடன் இருந்துள்ளார்.

பெரியாருடன் நாரா. நாச்சியப்பன எடுத்துக் கொண்ட படம்.
பெரியாருடன் நாரா. நாச்சியப்பன்.

பெரியாருடன் அவர் இருந்தபோது ஏற்பட்ட அனுபவத்தை ‘பர்மாவில் பெரியார்’ எனும் தலைப்பில் ஒரு புத்தகமாக எழுதியுள்ளார். 

நாரா. நாச்சியப்பன் எழுதிய பர்மாவில் பெரியார் புத்தகம்.
நாரா. நாச்சியப்பன் எழுதிய புத்தகம்.

இப்புத்தகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கிளைக் கழகம்தான் பர்மா திராவிட முன்னேற்றக் கழகம் எனும் கூற்றை அவர் தெரிவித்துள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழகம் குறித்து பர்மாவில் பெரியார் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளக் குறிப்பு.
பர்மாவில் பெரியார் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளக் குறிப்பு.

இதன்மூலம் பதிமுக, திமுகவின் கிளைக் கழகம்தான் என்பது உறுதியாகியுள்ளது.

 Conclusion

நம் விரிவான ஆய்வுக்குப்பின் திமுக, பதிமுகவுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது என்பதும் பதிமுக, திமுகவின் பர்மா கிளைக் கழகம் என்பதும் தெளிவாகியுள்ளது. இதன்மூலம் திமுக எனும் பெயரும் உதயசூரியன் எனும் சின்னமும் திருடப்பட்டது என்று பரவும் செய்தி முற்றிலும் பொய்யானது என்பது உறுதியாகியுள்ளது.

Result: False


Our Sources

Facebook Profile: https://www.facebook.com/senthil.paraiyar/posts/1136945996690079

Twitter Profile: https://twitter.com/svaitheaswarran/status/1203121673236439041

Twitter Profile: https://twitter.com/VaigaiPravin/status/1203231370379550720

Twitter Profile: https://twitter.com/CTR_Nirmalkumar/status/1281527472954064897

Twitter Profile: https://twitter.com/kryes/status/1239017513482104832

Hindu Tamil: https://www.hindutamil.in/news/tamilnadu/137968-.html

DMK Official site: https://dmk.in/history

Burmavil Periyar (The Book): https://www.tamilvu.org/library/nationalized/pdf/49-na.ra.nachiyappan/burmaavilperiyar.pdf


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular