Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
ரிக்ஷாத் தொழிலாளி ஒருவர் கண்ணீர் விட்டு அழும் வீடியோ ஒன்று, தற்சமயம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தற்போது சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலாகி ஒன்று வருகிறது.
அவ்வீடியோவில், ரிக்ஷாத் தொழிலாளி ஒருவரின் ரிக்ஷா ஒன்று அரசால் பறிமுதல் செய்யப்படுகிறது. அதைக் கண்டு அவர் உடைந்து அழுகிறார். பின்னர் இதுக்குறித்து பத்திரிக்கையாளர் ஒருவர் அவரிடம் பேட்டி எடுக்கிறார்.
இந்த வீடியோவானது, “இந்த நாட்டின் சட்டம் ஏழை மக்களுக்கு மட்டுமே” என்றத் தலைப்பிட்டு சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.
காண்பவர் மனதைக் கரைய வைக்கும் இந்த வீடியோவின் பின்னணிக் குறித்து அறிய, இதை நியூஸ்செக்கர் சார்பில் ஆராய்ந்தோம்.
அவ்வாறு ஆராய்ந்ததில் இவ்வீடியோவின் பின்னணியில் இருந்த உண்மைத்தன்மையை நம்மால் அறிய முடிந்தது.
உண்மையில் இந்நிகழ்வானது, சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டதுபோல் இந்தியாவில் நடந்தது அல்ல. இது பங்களாதேசத்தின் தலைநகரான டாக்காவில் நடந்ததாகும்.
ஃபஸ்லூர் ரெஹ்மான் எனும் இளைஞர் கொரானாக் காரணமாக வேலை இழந்துள்ளார். பின்பு Tk 80,000 (ரூ. 69,000) கடன் வாங்கி பேட்டரி மூலம் இயங்கும் ரிக்ஷாவைக் கடந்த 20 நாட்களுக்கு முன்பு வாங்கியுள்ளார்.
ஆனால் வங்காளத் தேசத்தில் பேட்டரி மூலம் இயங்கும் வாகனங்களுக்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகையால் The Dhaka South City Corporation (DSCC) சார்பாக ஃபஸ்லூர் ரெஹ்மானின் ரிக்ஷா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நடந்த சமயத்தில் எடுக்கப்பட்ட வீடியோவே தற்சமயம் வைரலாகியுள்ளது.
இந்த வைரலான வீடியோவைக் கண்ட ஆசன் புய்யன் எனும் நபர் இவருக்கு ரிக்ஷா ஒன்றை வாங்கித் தந்துள்ளார்.

இதேபோல் Shwapno எனும் நிறுவனமும் இவருக்கு இரண்டு ரிக்ஷாக்களை வாங்கித் தந்துள்ளது.
இந்த ரிக்ஷாக்களை வைத்துக்கொண்டு, ரெஹ்மான் அவரின் நீண்ட கால எண்ணமான, வீடுகளுக்கு காய்கறி டெலிவரி செய்யும் தொழிலைச் செய்யவிருக்கிறார்.
நமது தேடலில், ‘Dhaka Tribune’ எனும் பங்களாதேசத்தைச் சார்ந்த இணையத்தளத்தில் இந்நிகழ்வுக் குறித்தச் செய்தி வெளிவந்திருந்ததைக் காண முடிந்தது.

இதேபோல், Timesnownews.com எனும் இணையத்தளத்திலும் இந்நிகழ்வுக் குறித்தச் செய்தி இடம்பெற்றிருந்ததை நம்மால் காண முடிந்தது.

இவ்விருச் செய்திகளின் அடிப்படையிலேயே மேற்கூறிய விஷயங்கள் விவரிக்கப்பட்டன.
நமது விரிவான விசாரணைக்குப்பின் சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோவில் இருக்கும் நிகழவானது இந்தியாவில் நடக்கவில்லை என்பதும் அது பங்களாதேசத்தின் டாக்காவில் நடந்ததென்பதும் தெளிவாகியுள்ளது.
Twitter Profile: https://twitter.com/IrfanKhan_ji/status/1315200919592599552
Facebook Profile: https://www.facebook.com/beermohammedoo1/videos/3120364811523651
Twitter Profile: https://twitter.com/Sivanandhan2691/status/1315515537124884481
Facebook Profile: https://www.facebook.com/100035325275865/videos/373603973827109
Dhaka Tribune: https://www.dhakatribune.com/bangladesh/dhaka/2020/10/08/rickshaw-puller-turns-entrepreneur-with-help-from-shwapno
Facebook Profile: https://www.facebook.com/ahsan.h.bhuiyan/posts/10157417740691835
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
April 22, 2025
Vijayalakshmi Balasubramaniyan
December 4, 2024
Vijayalakshmi Balasubramaniyan
October 7, 2024