Fact Check
Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்

அண்ணாமலை மீது போக்சோ வழக்கு இருப்பதாகப் பரவும் போலி நியூஸ்கார்ட்!
அண்ணாமலை மீது போக்சோ வழக்கு இருப்பதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

காஞ்சிபுரம் திமுக MLA காவல்துறையினரை அவமரியாதையாக பேசியதாக பரவும் பழைய வீடியோ!
காஞ்சிபுரம் திமுக MLA எழிலரசன் அண்மையில் காவல்துறையினரை அவமரியாதையாக பேசியதாக பரவும் வீடியோவானது ஏறக்குறைய 5 ஆண்டுகளுக்கு முந்திய பழைய வீடியோவாகும்.

திமுக பொது செயலாளர் துரைமுருகன் உதவியாளர் வீட்டில் கட்டுகட்டாக பணம் என்று பரவும் 2019ஆம் ஆண்டு வீடியோ!
திமுக பொது செயலாளர் துரைமுருகன் உதவியாளர் வீட்டில் கட்டுகட்டாக பணம் கைப்பற்றப்பட்டதாகப் பரவும் வீடியோ கடந்த 2019ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும்.

தோனி பெயருக்குள் மைக் சின்னம்; வைரலாகும் படம் உண்மையானதா?
ஐபிஎல் மைதானத்தில் ரசிகர் ஒருவர் ஏந்திய பலகையில் தோனி பெயருக்குள் மைக் சின்னம் இருந்ததாக வைரலாகும் படம் எடிட் செய்து மாற்றப்பட்டதாகும்.

கர்நாடகாவில் ரதம் செல்லும் வழியில் காரை நிறுத்திய இஸ்லாமியர் என்று பரவும் தவறான தகவல்!
கர்நாடகாவில் ரதம் செல்லும் வழியில் காரை நிறுத்திய இஸ்லாமியர் என்று பரவும் தகவல் தவறானதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)