இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்

இந்தியா கூட்டணியின் பாட்னா பேரணி என்று பரவும் 2017ஆம் ஆண்டு புகைப்படம்!
இந்தியா கூட்டணியின் பாட்னா பேரணிக்கு கூடிய கூட்டம் என்று பரவும் புகைப்படம் 2017ஆம் ஆண்டு புகைப்படமாகும்.

வாரணாசியில் அகோரிகள் சிறுவனை நரபலி கொடுக்க முயற்சித்தாக பரவும் புனைவு வீடியோ!
வாரணாசியில் அகோரிகள் சிறுவனை நரபலி கொடுக்க முயற்சித்தாக பரவும் வீடியோ சித்தரிக்கப்பட்ட ஒரு புனைவு வீடியோவாகும்.

ராமர் கோவில் திறப்பிற்குப் பின்னரே சிறுமிகள் வன்கொடுமை அதிகம் நடப்பதாக மதுரை ஆதினம் கூறினாரா?
ராமர் கோவில் திறப்பிற்குப் பின்னரே நாட்டில் ரயில் விபத்துகள், சிறுமிகள் வன்கொடுமை அதிகம் நடக்கின்றன என்று மதுரை ஆதினம் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதாகப் பரவும் வதந்தி!
2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான தேதி ஏப்ரல் 19 என்று அறிவிக்கப்பட்டதாகப் பரவும் தகவல் போலியானதாகும்.

‘மோடி சுட்ட வடைகள்’ எனும் வாசகத்தையுடைய டீ-சர்ட்டை அண்ணாமலை விளம்பரப்படுத்தினாரா?
மோடி சுட்ட வடைகள் எனும் வாசகத்தையுடைய டீ-சர்ட்டை அண்ணாமலை விளம்பரப்படுத்தியதாக வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)