Fact Check
Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை நிறுத்தப்பட்டதா?
தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை நிறுத்தப்பட்டதாக பரவும் தகவல் தவறானதாகும்.

அதிமுகவினர் அனைவரும் பாதாம், பிஸ்தா சாப்பிட்டு வலுவோடு உள்ளோம் என்றாரா செல்லூர் ராஜூ?
அதிமுகவினர் அனைவரும் பாதாம், பிஸ்தா சாப்பிட்டு வலுவோடு உள்ளோம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

தமிழகத்தில் 11 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்ததா பாஜக?
தமிழகத்தில் 11 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை பாஜக அறிவித்ததாக பரவும் பட்டியல் போலியானதாகும்.

என் அந்தரங்க படத்தை வெளியிட்ட திமுகவுடன் இனி கூட்டணி கிடையாது என்றாரா பாரிவேந்தர்?
என் அந்தரங்க படத்தை வெளியிட்ட திமுகவுடன் இனி கூட்டணி கிடையாது என்று பாரிவேந்தர் கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

கஞ்சிக்கே வழியில்லாத எனக்கு கட்சி எதற்கு என்றாரா இயக்குநர் தங்கர்பச்சான்?
கஞ்சிக்கே வழியில்லாத எனக்கு கட்சி எதற்கு என்று இயக்குநர் தங்கர்பச்சான் கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)