திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024
திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024

HomeFact Checkதமிழகத்தில் 11 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்ததா பாஜக?

தமிழகத்தில் 11 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்ததா பாஜக?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: தமிழகத்தில் 11 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது பாஜக.

Fact: வைரலாகும் பட்டியல் போலியானது என்று பாஜக தரப்பு தெளிவு செய்துள்ளது.

தமிழகத்தில் 11 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை பாஜக அறிவித்ததாக பட்டியல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. இப்பட்டியலில் அண்ணாமலை, தமிழிசை சௌந்திரராஜன், விஜயதாரணி, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோரின் பெயர்கள் வேட்பாளராக இருப்பதை காண முடிந்தது.  

தமிழகத்தில் 11 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை பாஜக அறிவித்ததாக பரவும் பட்டியல்

X Link | Archive Link

தமிழகத்தில் 11 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை பாஜக அறிவித்ததாக பரவும் பட்டியல்

Archive Link

தமிழகத்தில் 11 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை பாஜக அறிவித்ததாக பரவும் பட்டியல்

Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை நிறுத்தப்பட்டதா?

Fact Check/Verification

தமிழகத்தில் 11 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை பாஜக அறிவித்ததாக பட்டியல் ஒன்று வைரலானதை தொடர்ந்து, முன்னதாக தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களில் இதுக்குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதா என தேடினோம்.

இத்தேடலில் வைரலாகும் இந்த வேட்பாளர் பட்டியல் போலியானது என்று தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்று பதிவிடப்பட்டிருப்பதை காண முடிந்தது.

இதனை தொடர்ந்து தமிழக பாஜகவின் சமூக ஊடகப் பிரிவின் தலைவர் எம்.எஸ்.பாலாஜியை தொடர்புக் கொண்டு பேசியதில் அவரும் இந்த பட்டியல் போலியானது என்று உறுதி செய்தார். தொடர்ந்து அவரது எக்ஸ் பக்கத்திலும் இந்த பட்டியல் போலியானது என்று பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.

இதனையடுத்து தமிழக பாஜகவின் மாநில செயலாளர்களுள் ஒருவரான எஸ்.ஜி.சூர்யாவை தொடர்புக் கொண்டு பேசுகையில் அவரும் இந்த பட்டியல் போலியானது என்று உறுதி செய்தார்.

 Also Read: அதிமுகவினர் அனைவரும் பாதாம், பிஸ்தா சாப்பிட்டு வலுவோடு உள்ளோம் என்றாரா செல்லூர் ராஜூ?

Conclusion

தமிழகத்தில் 11 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை பாஜக அறிவித்ததாக பரவும் பட்டியல் போலியானதாகும். இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Tweet from BJP Tamilnadu, Dated March 18, 2024
Tweet from Balaji M S, Head, State President, Social Media Cell, Dated March 18, 2024
Phone Conversation with SG Suryah, State Secretary, BJP Tamilnadu
Phone Conversation with Balaji M S, Head, State President, Social Media Cell, BJP Tamilnadu

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular