இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
அவற்றில் சிறந்த ஐந்து செய்திகள் உங்கள் பார்வைக்காக:

மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளை கொல்வதாக பரவும் வதந்தி
மருத்துவமனைகளில் பணத்திற்காக கொரோனா நோயாளிகளை கொலை செய்வதாக கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. ஆனால் இது தவறானத் தகவலாகும்.

50 ஆயிரம் படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை குஜராத்தில் கட்டியதா RSS?
குஜராத்தில் 50 ஆயிரம் படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை RSS அமைப்பு கட்டிக்கொடுத்ததாக கூறி அமெரிக்காவின் இராணுவ தலைமையகமான பென்டகன் படத்தை ஒருவர் சமூக வலைத்தளப் பக்கத்தில் கேலியாக பதிவிட்டுள்ளார்.

முகக்கவசம் அணியாததற்கு அபராதம் விதித்ததால் கர்நாடக போலீஸ் தாக்கப்பட்டனரா?
கர்நாடகாவில் முகக்கவசம் அணியாததற்கு அபராதம் விதித்ததால் போலீசாரை பொதுமக்கள் தாக்கியதாக கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. ஆனால் இது தவறானத் தகவலாகும்.

ஆர்.எஸ்.எஸ் 6000 படுக்கை கொண்ட கொரோனா சிறப்பு மருத்துவமனையை அமைத்துள்ளதா?
ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, சத்தமில்லாமல் 6000 படுக்கை வசதிகள் கொண்ட பிரமாண்ட மருத்துவமனை ஒன்றினை கோவிட்-19 நோயாளிகளுக்காக உருவாக்கியுள்ளது என்று பரவுகின்ற புகைப்படம் தவறானதாகும்.

கடலூரில் கண்டெய்னரில் கடத்தப்பட்டனவா வாக்குப்பதிவு எந்திரங்கள்?
கடலூரில் கண்டெய்னர் லாரி ஒன்றில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தப்பட்டதாகப் பரவிய புகைப்படச் செய்தி தவறானதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)