இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
அவற்றில் சிறந்த ஐந்து செய்திகள் உங்கள் பார்வைக்காக:

தமிழகத்தில் மர்ம லாரிகள் என்று பரவும் வதந்தி
கன்டெய்னருக்குள் அலுவலகம் போன்ற அமைப்பை உருவாக்கி தமிழகத்தில் மர்ம லாரிகள் உலவுதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. ஆனால் இது தவறானத் தகவலாகும்.

சென்னையில் முழு ஊரடங்கு என்று பரவும் வதந்தி
12 நாட்களுக்கு சென்னையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. ஆனால் இது தவறானத் தகவலாகும்.

சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்றாரா அமித் ஷா?
அமித் ஷா அவர்கள் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்று பேசியதாக புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. ஆனால் இது தவறானத் தகவலாகும்.

அபிநந்தன் பாஜக ஆதரவாளர் என்று பரவும் வதந்தி
அபிநந்தன் அவர்கள் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. ஆனால் இது தவறானத் தகவலாகும்.

குடும்பத் தலைவர்கள் இல்லாத குடும்பத் தலைவிகளுக்கு மட்டும்தான் ரூ.1500 உதவித்தொகையா?
குடும்பத் தலைவர்கள் இல்லாத குடும்பத் தலைவிகளுக்கு மட்டும்தான் ரூ.1500 வழங்கும் திட்டம், மற்றும் ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கும் திட்டம் பொருந்தும் என்று தமிழக முதல்வர் அறிவித்ததாக புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. ஆனால் இது தவறானத் தகவலாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)