இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
அவற்றில் சிறந்த ஐந்து செய்திகள் உங்கள் பார்வைக்காக:

ஓங்கோல் தெலுங்கரான ஸ்டாலின் தமிழ்நாடு முதல்வராகும்போது தமிழ்நாடு திரைப்பட சங்க தலைவராக நான் ஆகக் கூடாதா என கேள்வி எழுப்பினாரா பிரகாஷ்ராஜ்?
ஓங்கோல் தெலுங்கரான ஸ்டாலின் தமிழ்நாடு முதல்வராகும்போது தமிழ்நாடு திரைப்பட சங்க தலைவராக நான் ஆகக் கூடாதா என்று பிரகாஷ்ராஜ் கேள்வி எழுப்பியதாக நியூஸ்கார்ட் ஒன்று பரவி வருகின்றது. ஆனால் இது தவறானத் தகவலாகும்.

ஒளிப்பதிவு திருத்த வரைவு மசோதாவை திரும்ப பெறாவிட்டால் சினிமாவிலிருந்தே விலகுவேன் என்றாரா சூர்யா?
ஒளிப்பதிவு திருத்த வரைவு மசோதாவை மத்திய அரசு திரும்ப பெறாவிட்டால் சினிமாவிலிருந்தே முற்றிலும் விலகுவேன் என்று சூர்யா கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலாகி வருகின்றது.ஆனால் இது தவறானத் தகவலாகும்.

தெலுங்கரான விஷால் தமிழ் நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெறும்போது நான் கூடாதா என்றாரா பிரகாஷ் ராஜ்?
தெலுங்கரான விஷால் தமிழ் நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெறும்போது நான் தெலுங்கு நடிகர் சங்கத் தேர்தலில் நான் போட்டியிடக் கூடாதா என்று நடிகர் பிரகாஷ் ராஜ் பேசியதாக செய்தி ஒன்று வைரலாகி வருகின்றது. ஆனால் இது தவறானத் தகவலாகும்.

உலகிலேயே அதிக அளவு கொரோனா தடுப்பூசி இந்தியாவில் போடப்பட்டுள்ளதா?
உலகிலேயே அதிக அளவு கொரோனா தடுப்பூசி இந்தியாவில் போடப்பட்டதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. ஆனால் இது தவறானத் தகவலாகும்.

காங்கிரஸ் கட்சியிடம் இருந்து நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் 10 கோடி வாங்கியதாக வதந்தி!
காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் மூலமாக சீமான் 10 கோடி ரூபாய் பணம் பெற்றதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருப்பதாகப் பரவும் புகைப்படம் தவறானதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)