ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkகாங்கிரஸ் கட்சியிடம் இருந்து நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் 10 கோடி வாங்கியதாக வதந்தி!

காங்கிரஸ் கட்சியிடம் இருந்து நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் 10 கோடி வாங்கியதாக வதந்தி!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

காங்கிரஸ் எம்.எல்.ஏ மூலமாக சீமானுக்கு 10 கோடி ரூபாய் பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருப்பது போன்ற நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

காங்கிரஸ்
Source: Facebook

இயக்குனர் மற்றும் நடிகராக இருந்து வந்த சீமான், நாம் தமிழர் கட்சியை ஆரம்பித்த பிறகு மக்களிடையே பிரபலமடைந்தார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளராகவே தற்போது அவர் அறியப்படுகிறார்.

இந்நிலையில், “காங்கிரஸ் எம்.எல்.ஏ மூலம் நடிகர் சீமான் அவர்களுக்கு 10 கோடி பணம் பரிமாற்றம் அம்பலம்” என்று பிரபல செய்தி சேனல் ஒன்று நியூஸ் கார்டினை வெளியிட்டதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

காங்கிரஸ்
Source: Facebook

Facebook Link

காங்கிரஸ்
Source: Facebook

Facebook Link

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification:

காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் மூலமாக சீமான் 10 கோடி ரூபாய் பணம் பெற்றதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருப்பதாகப் பரவும் புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து அறிய அது குறித்து ஆராய்ந்தோம்.

குறிப்பிட்ட அப்புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது, கடந்த 2018 ஆம் ஆண்டு முதலே அப்புகைப்படம் வைரலாக சமூக வலைத்தளங்களில் சுற்றி வருவது நமக்குத் தெரிய வந்தது.

Source: Facebook

Facebook Link

மேலும், நியூஸ் 18 சேனல் கடந்த 2017 ஆம் ஆண்டு இந்த நியூஸ் கார்டினை வெளியிட்டிருப்பது போன்ற தேதி வைரல் புகைப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட வைரல் நியூஸ் கார்டில் உள்ள எழுத்துரு, நியூஸ் 18 சேனலின் பாண்ட் வகையுடன் ஒத்துப் போகவில்லை. மேலும், செய்தி நிறுவனங்கள் ஒருவரது பெயர் அழைப்பிற்கு பின்பு, அவர்கள் என்று அடைமொழி அளித்து எழுதுவது இல்லை. இதில், சீமான் அவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Source: Facebook

Facebook Link

எனவே, வைரல் புகைப்படம் குறித்து நியூஸ் 18 தமிழ்நாடு செய்தியாளரிடம் பேசினோம். அப்போது அவர், குறிப்பிட்ட அந்த நியூஸ் கார்டு பல ஆண்டுகளாக இதுபோன்று சமூகவலைத்தளத்தில் பரப்பப்படுவதாகவும், ஆனால், அது போன்ற எந்த நியூஸ் கார்டும், செய்தியும் தங்களால் வெளியிடப்படவில்லை. குறிப்பிட்ட அந்த நியூஸ் கார்டு போலியானது; எடிட் செய்யப்பட்டது என்று நமக்கு உறுதியளித்தார்.

இதுகுறித்து, நாம் தமிழர் கட்சி செயல்பாட்டாளர் ஒருவரிடம் பேசியபோது, தலைவர் சீமான் பற்றி அவதூறு பரப்பும் வகையில் விஷமிகள் சிலரால் இதுபோன்று எடிட் செய்யப்பட்டு குறிப்பிட்ட புகைப்படம் வைரல் செய்யப்படுவதாகத் தெரிவித்தார்.

Conclusion:

காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் மூலமாக சீமான் 10 கோடி ரூபாய் பணம் பெற்றதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருப்பதாகப் பரவும் புகைப்படம் போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources:

News 18 Tamil Nadu

Facebook: https://www.facebook.com/News18TamilNadu/

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular