Fact Check
Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்!
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்

பாகிஸ்தான் இராணுவத்தை பலுசிஸ்தான் கிளர்ச்சி படையினர் தாக்கியதாக பரவும் வீடியோ உண்மையானதா?
பாகிஸ்தான் இராணுவத்தை பலுசிஸ்தான் கிளர்ச்சி படையினர் வெடி வைத்து தாக்கியதாக பரவும் வீடியோத்தகவல் தவறானதாகும்.

என் உடலில் ஓடுவது அதிமுகவின் ரத்தம் என்று நயினார் நாகேந்திரன் அண்மையில் கூறினாரா?
என் உடலில் ஓடுவது அதிமுகவின் ரத்தம் என்று நான்கு வருடங்களுக்கு முன்பு நயினார் நாகேந்திரன் பாஜக துணைத்தலைவராக இருந்தபோது பேசிய கருத்தை, அண்மையில் பாஜக மாநிலத்தலைவராக பதவியேற்றப்பின் பேசியதாக தவறாக பரப்பப்படுகின்றது.

ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு பாகிஸ்தானில் எரிபொருள் பற்றாக்குறையால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதா?
பாகிஸ்தானில் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக விமானம் ரத்து செய்யப்பட்டதாக பரவும் வீடியோ உண்மையே. ஆனால் அவ்வீடியோவில் காணப்படும் சம்பவம் அண்மையில் ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு நடந்தது அல்ல; 2023 ஆம் ஆண்டில் நடந்ததாகும்.

ஆப்கானிஸ்தான் மலைத்தொடரில் அமைந்துள்ள சிவன் கோயில் என்று பரவும் புகைப்படச்செய்தி உண்மையா?
ஆப்கானிஸ்தான் மலைத்தொடரில் அமைந்துள்ள சிவன் கோயில் என்று பரவும் புகைப்படச்செய்தி தவறானதாகும்.

முதல்மரியாதை படத்தின் கதை தன்னுடையது என்று பேசினாரா சீமான்?
முதல்மரியாதை படத்தின் கதை தன்னுடையது என்பதாக நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் பேசியதாகப் பரவும் வீடியோ தகவல் திரிக்கப்பட்டதாகும்.