ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact CheckWeekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

அவற்றில் சிறந்த ஐந்து செய்திகள் உங்கள் பார்வைக்காக:

மேற்கு வங்கத்தில் பாஜக மகளிரணி நிர்வாகி பாலியல் வன்கொடுமையால் கொலை செய்யப்பட்டாரா?

மேற்கு வங்கத்தில் பாஜக மகளிரணி நிர்வாகியான சினேகா என்கிற இளம்பெண் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகப் பரவும் தகவல் முழுவதும் உண்மையில்லை.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

தமிழகத்தின் புதிய ஆளுநராக கிரண் பேடி பதவியேற்க உள்ளாரா?

கிரண் பேடி அவர்கள் தமிழகத்தின் அடுத்த ஆளுநராக பதவியேற்கவிருப்பதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. ஆனால் இது தவறானத் தகவலாகும்.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திர பாபு பதவியேற்க உள்ளாரா?

தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திர பாபு நியமனம் என்று பரவிய தகவல் தவறானதாகும்.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

எம்.எஸ்.தோனி கொரோனா நிதியாக 15 கோடி அளித்தாரா?

எம்.எஸ்.தோனி கொரோனா நிதியாக 15 கோடி அளித்தார் என்று கூறி நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. ஆனால் அது எடிட் செய்யப்பட்டதாகும்.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

கொரோனாவிற்கு வீட்டு வைத்தியம் கண்டறிந்த பாண்டிச்சேரி மாணவரா?

 கொரோனாவிற்கு வீட்டு வைத்திய முறைகளைக் கண்டறிந்த பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் இந்திய மாணவர் ராமு, கோவிட்-19 தொற்றுக்கு ஒரு டீஸ்பூன் கருப்பு மிளகு தூள், இரண்டு டீஸ்பூன் தேன் மற்றும் ஒரு சிறிய துண்டு இஞ்சிச்சாறு போதும் என்று கண்டறிந்ததாகத் பதிவு ஒன்று முகநூலில் வைரலாகியது. அது தவறான பதிவாகும்.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan

Most Popular