இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
அவற்றில் சிறந்த ஐந்து செய்திகள் உங்கள் பார்வைக்காக:

ஒரே பாலின திருமணம் செய்தால்தான் நீ உண்மையான இந்து என்றாரா பாஜகவின் கல்யாணராமன்?
ஒரே பாலினத்தவரை திருமணம் செய்தால்தான் நீ உண்மையான இந்து என்று பாஜகவைச் சேர்ந்த கல்யாணராமன் கூறியதாகப் பரவும் புகைப்படச் செய்தி போலியானதாகும்.

பாவம் என்றால் பெண்ணையும் ஆணையும் இறைவன் படைப்பானா என்கிற பாடலை பாடியபடி சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தாரா ஓபிஎஸ்?
பாவம் என்றால் பெண்ணையும் ஆணையும் இறைவன் படைப்பானா என்கிற பாடலை பாடியபடி சட்டப்பேரவையில் இருந்து எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஓ.பன்னீர் செல்வம் வெளிநடப்பு செய்ததாகப் பரவும் நியூஸ் கார்டு போலியானதாகும்.

மீரா மிதுன் சீமான் குறித்து விமர்சித்ததாக பரவும் நியூஸ்கார்ட் உண்மையானதா?
மீரா மிதுன் சீமான் குறித்து விமர்சித்ததாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

இஸ்லாமிய நாடுகளில் இருந்து வரும் கேஸ் சிலிண்டர்களை புறக்கணித்து விறகடுப்பு உபயோகிப்போம் என்றாரா அண்ணாமலை?
இஸ்லாமிய நாடுகளில் இருந்து வரும் கேஸ் சிலிண்டர்களைப் புறக்கணித்து விறகடுப்புகளை உபயோகிப்போம் என்று பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை கூறியதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு போலியானதாகும்.

விநாயகர் சிலைகளை குப்பை வண்டியில் பறிமுதல் செய்ததா திமுக அரசு?
திமுக அரசு விநாயகர் சிலைகளை பறிமுதல் செய்து குப்பை வண்டியில் கொண்டு சென்றதாக பரவும் புகைப்படம் தவறானதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)