இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

உலகத்தின் வலிமையான தலைவர் மோடி என்று நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளதா?
பிரதமர் மோடி உலகத்தின் வலிமையான தலைவர் என்று நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. ஆனால் உண்மையில் அப்புகைப்படம் போலியானதாகும்.

திமுக கூட்டணியிலிருந்து விசிக விலகுகின்றதா?
திமுக கூட்டணியிலிருந்து விசிக விலகுவதாக விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்தார் என்று நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இத்தகவல் முற்றிலும் பொய்யாகும்.

பின்தங்கிய மாநிலங்களுக்காகவும்,தேச நலனுக்காகவும் தமிழகம் ஜிஎஸ்டி பங்கை விட்டுக் கொடுக்க வேண்டும் என்றாரா பிரதமர்?
பின்தங்கிய மாநிலங்களுக்காகவும், தேச நலனுக்காகவும் தமிழகம் ஜிஎஸ்டி பங்கை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று பிரதமர் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று பரவி வருகின்றது. இத்தகவல் முற்றிலும் பொய்யாகும்.

தாராபுரம் தொகுதியில் ஜெயிக்க வழியின்றி மபியில் இருந்து எம்பியாகும் எல்.முருகனுக்கு வாழ்த்துகள் என்று வாழ்த்தியதா தமிழக பாஜக?
தாராபுரம் தொகுதியில் நின்று தமிழகத்தில் ஜெயிக்க வக்கில்லாமல் மத்திய பிரதேசத்தில் இருந்து நியமன எம்பியாகும் எல்.முருகனுக்கு வாழ்த்துகள் என்பதாகப் பரவும் பாஜக கட்சியின் போஸ்டர் கார்டு போலியானதாகும்.

திமுக, அதிகாரம் கையில் இருப்பதால் விசிக மீது கட்டவிழ்த்து விடும் சாதிவெறியை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றாரா வைகோ?
திமுக, அதிகாரம் கைகளில் இருக்கின்ற காரணத்தினால் விசிக மீது சாதிவெறியை கட்டவிழ்த்து விடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வைகோ கூறியதாகப் பரவும் நியூஸ் கார்டு போலியானதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)