Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.
பிரதமர் மோடி உலகத்தின் வலிமையான தலைவர் என்று நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
குவாட் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு மூன்று நாட்கள் அரசு முறை சுற்றுப் பயணம் மேற்கொண்டு உள்ளார். அங்கு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன் உள்ளிட்ட உலகத் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
Also Read: கடனுதவி பெறுவதற்காக அமெரிக்கா சென்றாரா பிரதமர் மோடி?
இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை,“உலகத்தில் அதிகம் விரும்பப்படுபவரும், உலகத்தின் வலிமையான தலைவருமான மோடி அமெரிக்கா வந்துள்ளார்” என்று பிரதமர் மோடி குறித்து அதன் முகப்பு பக்கத்தில் செய்தி வெளியிட்டதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact check/ Verification
சமூக வலைத்தளங்களில் ஏற்கனவே சில மாதங்களுகு முன்பு பிரதமர் மோடி, கண்ணீர் சிந்தியதைக் கேலி செய்யும் வகையில் நியூயார்க் டைம்ஸ் முதலை ஒன்று கண்ணீர் வடிப்பதைப் போன்று முகப்புப் பக்கத்தில் பதிவிட்டதாக புகைப்படம் ஒன்று பரவியது.
அதுக்குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்து, அது பொய்யானது என்று செய்தி வெளியிட்டிருந்தோம். அச்செய்தியை இங்கே படிக்கலாம்.
இதனைத் தொடர்ந்து தற்போது பிரதமர் மோடி உலகத்தின் வலிமையான தலைவர் என்று நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளதாக புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது. இத்தகவல் உண்மையானதா என்பது குறித்து நியூஸ்செக்கர் சார்பில் ஆய்வு செய்ய தொடங்கினோம்.
நமது ஆய்வில் வைரலாகும் புகைப்படத்தில், தேதி குறிப்பிடும் இடத்தில் செப்டம்பர் மாதத்தை எழுத்துப்பிழையுடன் (SEPTEMBER என்பதற்கு பதிலாக SETPEMBER என்று எழுதப்பட்டுள்ளது) அச்சிடப்பட்டிருப்பதையும், பிரதமர் புகைப்படத்தின் கீழ் இருந்த புகைப்படக் குறிப்பில் “ஹர் ஹர் மோடி” என்ற வாசகம் பயன்படுத்தப்பட்டிருப்பதையும் நம்மால் காண முடிகின்றது.
ஒரு உலகப் புகழ்பெற்ற பத்திரிக்கையில், ஒரு அண்டைநாட்டு தலைவர் குறித்து இவ்வாறு துதிபாடுவது, போதாதற்கு எழுத்துப்பிழை போன்றவை இருப்பது நமக்குள் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
ஆகவே வைரலாகும் புகைப்படத்தில் குறிப்பிட்டுள்ள செப்டம்பர் 26 ஆம் தேதியின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையின் முகப்பு பக்கததை அதன் அதிகாரப் பூர்வ இணையத்தளத்தில் தேடினோம்.
இத்தேடலில் குறிப்பிட்ட தேதியில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் மோடி குறித்த செய்தி இடம்பெறாமல் வேறு செய்தி இடம்பெற்றிருப்பதை நம்மால் காணமுடிந்தது.
இதன்மூலம் வைரலாகும் புகைப்படம் போலியாக எடிட் செய்யப்பட்டது என்பதை நம்மால் உணர முடிந்தது. வாசகர்களின் புரிதலுக்காக நியூயார்க் டைம்ஸின் உண்மையான முகப்பு பக்கத்தையும் எடிட் செய்யப்பட்ட முகப்பு பக்கததையும் கீழே ஒப்பிட்டு காட்டியுள்ளோம்.
மேற்கிடைத்த ஆதாரத்தின் அடிப்படையில் பார்க்கும்போது பிரதமர் மோடி உலகத்தின் வலிமையான தலைவர் என்று நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளதாக பரவும் புகைப்படம் போலியாக எடிட் செய்யப்பட்டது என்பது உறுதியாகின்றது.
Also Read: திமுக அரசு ஜெயலலிதாவின் ஊழல்களை என் மீது சுமத்த பார்க்கின்றது என்றாரா எடப்பாடி பழனிசாமி?
Conclusion
பிரதமர் மோடி உலகத்தின் வலிமையான தலைவர் என்று நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளதாக பரவும் புகைப்படம் போலியாக எடிட் செய்யப்பட்ட ஒன்று என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.