Claim: கேரளாவில் உடலில் தீ வைக்கப்பட்ட யானைகள்
Fact: வைரலாகும் புகைப்படம் மேற்கு வங்கத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும்.
கேரளாவில் யானையின் உடலில் தீ வைக்கப்பட்டதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”வயநாடு காணமல் போனதற்கு காரணம்” என்பதாக இந்த புகைப்படம் பரவுகிறது.

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: அம்மாவை மதிக்காமல் சென்றாரா விஜய்?
Fact Check/Verification
கேரளாவில் யானையின் உடலில் தீ வைக்கப்பட்டதாகப் பரவும் புகைப்படத்தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது அப்புகைப்படம் கேரளாவில் எடுக்கப்பட்டது அல்ல என்பது நமக்கு உறுதியாகியது.
கடந்த 2017ஆம் ஆண்டு நேஷனல் ஜியாகிரபிக் வெளியிட்டிருந்த கட்டுரையின்படி ”இந்திய மாநிலம் மேற்கு வங்காளத்தில் தாய் யானை மற்றும் குட்டி யானையின் மீது நெருப்பு பற்றவைக்கப்பட்ட தார் உருண்டைகள் எறியப்பட்ட நிலையில் அக்கும்பலிடம் இருந்து அவை தப்பி ஓடும் காட்சி” என்று இந்த புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

இதுதொடர்பாக மேலும் பிபிசி குஜராத் கடந்த நவம்பர் 08, 2017 அன்று வெளியிட்டுள்ள கட்டுரையில் இப்புகைப்படம் மேற்கு வங்காளம் பன்குடாவில் சிலர் யானைகளைத் துன்புறுத்திய நிலையில் அவற்றை பிப்லாப் கஜ்ரா என்கிற புகைப்படக்கலைஞர் படம்பிடித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அப்புகைப்படமே தற்போது கேரளாவில் எடுக்கப்பட்டது என்பதாகப் பரவி வருகிறது.

Also Read: ராகுல் காந்தியை குனிந்து வணங்கினாரா உத்தவ் தாக்கரே?
Conclusion
கேரளாவில் யானையின் உடலில் தீ வைக்கப்பட்டதாகப் பரவும் புகைப்படத்தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Report by BBC Gujarati, Dated November 08, 2017
Report by National Geographic, Dated November 10, 2017
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)