வெள்ளிக்கிழமை, மே 3, 2024
வெள்ளிக்கிழமை, மே 3, 2024

HomeFact Checkமழையின் கோரப்பிடியில் நெல்லை என்று பரவும் மொராக்கோ வீடியோ!

மழையின் கோரப்பிடியில் நெல்லை என்று பரவும் மொராக்கோ வீடியோ!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: மழையின் கோர பிடியில் நெல்லை – வீடியோ காட்சி

Fact: இத்தகவல் தவறானதாகும். வைரலாகும் வீடியோவில் இருப்பது மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட வெள்ளக்காட்சியாகும்.

மழையின் கோரப்பிடியில் திருநெல்வேலி என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது. ”மழையின் கோர பிடியில் நெல்லை” என்று இந்த வீடியோ பரவி வருகிறது.

Screenshot from X @PaulDuraiDurai1

Archived Link

மழையின்
Screenshot from Facebook/thangaganesan.kaliaperumal

Facebook Link

Screenshot from Facebook/Mayilaiadmk

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: தமிழக அரசின் வெள்ள நிவாரண தொகையை நாம் தமிழர் கட்சிக்கு நிதியாக அனுப்பக் கேட்டாரா சீமான்?

Fact Check/Verification

மழையின் கோரப்பிடியில் நெல்லை என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம். அதன் முடிவில், வைரலாகும் வீடியோ மொராக்கோ நாட்டில் எடுக்கப்பட்டது என்பது நமக்கு உறுதியாகியது.

மொராக்கோ நாட்டின் Moulay Brahim பகுதியில் கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு இது என்று Disaster News என்னும் ஊடகத்தின் X பக்கத்தில் இந்த வீடியோ இடம்பெற்றுள்ளது.

மேலும், மொராக்கோ வேர்ல்ட் நியூஸ் என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் இந்த வீடியோவானது, “Heavy rainfall caused flooding in Moulay Brahim, a small town in the Al Haouz province.” என்று இடம்பெற்றுள்ளது.

Instagram will load in the frontend.

You Weather என்கிற செய்தி ஊடகத்தின் இணையப்பக்கத்தில் “Terrible flooding washes away cars in Morocco town” என்கிற தலைப்பிலான செய்தியில் இந்த வீடியோ இடம்பெற்றுள்ளது.

Also Read: அயோத்தி ராமர் கோயில் கட்டுமான குழுவினருடன் உணவருந்தும் பிரதமர் மோடி என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Conclusion

மழையின் கோரப்பிடியில் நெல்லை என்று பரவும் வீடியோ மொராக்கோ நாட்டில் எடுக்கப்பட்டது என்பது  நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
YouTube post from Meteored, Dated July 19, 2023

X post from Disaster News, Dated July 19, 2023

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular