Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.
கருப்பு பூஞ்சை நோய் பிராய்லர் கோழி மூலம் பரவுவதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
நம் நாட்டில் கொரானாவின் இரண்டாம் அலை மிகத் தீவிரமாக உள்ளது. இந்நோய்க் கிருமியைக் கட்டுப்படுத்த அரசு பல முயற்சிகளை எடுத்து வருகின்றது.
இந்த பேரிடர் காலத்தில் கொரானாத் தொற்றுடன் கருப்பு பூஞ்சை, வெள்ளைப் பூஞ்சை, மஞ்சள் பூஞ்சை உள்ளிட்டத் தொற்றுகளும் அதிகளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது.
இந்நிலையில் கருப்பு பூஞ்சை நோய் பிராய்லர் கோழி மூலம் பரவுவதாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இத்தகவலை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
கருப்பு பூஞ்சை நோய் பிராய்லர் கோழி மூலம் பரவுவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியதைத் தொடர்ந்து இதன் பின்னணியில் இருந்த உண்மைத்தன்மைக் குறித்து ஆய்வு செய்தோம்.
முன்னதாக கருப்பு பூஞ்சை நோய் என்றால் என்ன?, அது எதன் காரணமாக பரவுகின்றது என்பது குறித்து ஆய்வு செய்தோம்.
நம் ஆய்வில் மருத்துவர் விஜய் ஷங்கர் இந்த கருப்பு பூஞ்சை நோய் குறித்து மாலை முரசுக்கு அளித்த விளக்கம் நம் கண்ணில் பட்டது.
மருத்துவர் விஜய் ஷங்கர் அவர்களின் கருத்துப்படி பார்க்கும்போது நமக்குத் தெளிவாகுவது என்னவென்றால், கருப்பு பூஞ்சை என்பது காற்று, மணல் போன்றவற்றில் எப்போதுமே காணப்படுகின்றது, நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி இப்பூஞ்சையிடம் நம்மை காத்து வருகின்றது.
நம் உடலில் நோய் எதிர்ப்பு குறைந்தால் மட்டுமே இந்நோய் நம்மைத் தாக்கும். இதைத் தவிர்த்து பிராய்லர் கோழிகளாலோ அல்லது மற்றக் காரணிகளாலோ கருப்பு பூஞ்சை நம்மைத் தாக்குவதாக மருத்துவ ரீதியாக எந்த வித தரவுகளும் இதுவரை இல்லை.
மத்திய அரசும் அதிகாரப்பூர்வ டிவிட்டர் தளமான PIB Factcheck டிவிட்டர் தளவில் இதே கூற்றைப் ப்திவு செய்துள்ளது. கூடவே கருப்பு பூஞ்சை பரவுவதற்ககான காரணம், அதன் அறிகுறிகள், அத்ற்கு செய்ய வேண்டிய மருத்துவங்கள் குறித்து ஏற்கனவே பதிவிட்டிருந்த பதிவையும் இப்பதிவுடன் இணைத்திருந்தது.
Read Also: ஜெயரஞ்சன் குறித்து நாராயணன் திருப்பதி இவ்வாறு டிவீட் செய்தாரா?
Conclusion
ஒன்று சமூக வலைத்தளங்களில் கருப்பு பூஞ்சை நோய் பிராய்லர் கோழி மூலம் பரவுவதாக பரவியத் தகவல் முற்றிலும் தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
PIB: https://twitter.com/PIBFactCheck/status/1399615441723486213
Malai Murasu: https://www.youtube.com/watch?v=gvHvwNS0Klg
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.