செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 30, 2024
செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 30, 2024

HomeFact Checkஅண்ணாமலையின் பாதயாத்திரையில் அதிமுக பங்கேற்காது என்றாரா செல்லூர் ராஜூ?

அண்ணாமலையின் பாதயாத்திரையில் அதிமுக பங்கேற்காது என்றாரா செல்லூர் ராஜூ?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: அண்ணாமலையின் பாதயாத்திரையில் அதிமுக பங்கேற்காது – செல்லூர் ராஜூ 

Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

அண்ணாமலையின் பாதயாத்திரையில் அதிமுக பங்கேற்காது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

”பாதயாத்திரை நிகழ்ச்சி – அதிமுக பங்கேற்காது. பாஜக வளர அண்ணாமலை நடத்தும் பாதயாத்திரையில் எடப்பாடி பழனிசாமி ஏன் கலந்து கொள்ள வேண்டும்? வெக்கம், மானம் இருந்தால் அதிமுக முதுகில் சவாரி செய்வதை முதலில் பாஜக நிறுத்தட்டும். செல்லூர் ராஜு ஆவேசம்!” என்று இந்த நியூஸ்கார்ட் பரவி வருகிறது.

Screenshot from Facebook/jaffer.hameed.1

Facebook Link

Screenshot from Facebook/singaravelu.singaravelu.585

Facebook Link

Screenshot from Twitter @SaraVellore

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: ‘நரக பேருந்து நிலையம்’ என்று எழுத்துப்பிழையுடன் முகப்புப் பலகை வைத்ததா கோவை மாநகராட்சி?

Fact Check/Verification

  அண்ணாமலையின் பாதயாத்திரையில் அதிமுக பங்கேற்காது என்று செல்லூர் ராஜூ கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் நியூஸ்கார்டுகள் நியூஸ் 7 தமிழ் மற்றும் தந்தி டிவி பெயரில் பரவிய நிலையில் அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கங்களை ஆராய்ந்தோம். 

ஆனால், அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கங்களில் அப்படிப்பட்ட நியூஸ்கார்ட் எதுவும் வெளியாகியிருக்கவில்லை. எனவே, நியூஸ் 7 தமிழ்  ஆசிரியர் சுகிதா சாரங்கராஜை தொடர்பு கொண்டு கேட்டோம். அவர், “வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது” என்று உறுதி செய்தார். மேலும், அவர்களுடைய சமூக வலைத்தளப்பக்கத்திலும் இதனை உறுதி செய்தார்.

தந்தி டிவி வெளியிட்டிருந்த “பாதயாத்திரை நிகழ்ச்சி-அதிமுக பங்கேற்பு” என்கிற நியூஸ்கார்டினை எடிட் செய்து குறிப்பிட்ட வைரல் நியூஸ்கார்ட் பரவுகிறது என்று தெரிந்தது.

தொடர்ந்து, தந்தி டிவி நியூஸ்கார்ட் குறித்து தந்தி டிவி டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளர் வினோத்திடம் தொடர்பு கொண்டு கேட்டோம். அவர், “தந்தி டிவி பெயரில் பரவும் நியூஸ்கார்ட் போலியானது; அதை நாங்கள் வெளியிடவில்லை” என்று விளக்கமளித்தார். 

Also Read: உத்தரகாண்ட் குறித்து மதவாத பிரச்சாரம் செய்த இந்து சாமியார் விபச்சார அழகிகளுடன் பிடிபட்டாரா?

Conclusion

அண்ணாமலையின் பாதயாத்திரையில் அதிமுக பங்கேற்காது என்று செல்லூர் ராஜூ கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Phone Conversation With, Sugitha Sarangaraj, Digital Head, News 7 Tamil, Dated July 29, 2023
Phone Conversation With, Vinoth, Thanthi TV Digital, Dated July 29, 2023
Twitter Post From, News 7 Tamil, Dated July 29, 2023


  (உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular