Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.
வலிமை திரைப்படம், நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் இத்திரைப்படத்தைப் பார்க்க கண்டிப்பாக சென்னைக்கு வருவேன் என்று புருநே நாட்டு இளவரசி கூறியுள்ளதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித் நடிப்பில், போனி கபூர் தயாரிப்பில், வினோத் இயக்கத்தில் உருவாகி வருகின்ற திரைப்படம் ‘வலிமை’. கிட்டதட்ட ஊர், உலகமெல்லாம் வலிமை அப்டேட் எங்கே என்று பல்வேறு வகையிலும் கேள்விகளும், மீம்களும், ட்ரோல்களும் செய்த நிலையில், மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் இருந்த இப்படத்தின் பர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.
இந்நிலையில், “தல அஜித்தை பார்த்து ரசித்த இளவரசி. வலிமை படம் பார்க்க சென்னைக்கு வருவேன் என்று புருநே நாட்டு இளவரசி கூறியுள்ளார். அடுத்த ஜென்மத்தில் நான் இந்தியாவில் பிறந்து தல அஜித்துடன் ஒரு படமாவது நடிக்க வேண்டும். இதை என் கணவரும் புன்னகையுடன் புரிந்து கொண்டார்” என்று கூறியதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification:
வலிமை திரைப்படத்தைப் பார்க்க சென்னைக்கு வருவேன் என்று புருநே நாட்டு இளவரசி கூறியதாகப் பரவும் புகைப்படத்தகவல் குறித்த உண்மையறிய அதுகுறித்த தேடலில் இறங்கினோம்.
முதலில் குறிப்பிட்ட புகைப்படத்தில் இருப்பது புருநே நாட்டு இளவரசிதானா என்று ரிவர்ஸ் சர்ச் செய்தபோது, அவர் புருநே நாட்டு இளவரசி சரா என்பது உறுதியானது. மேலும், இப்புகைப்படமானது அவருடைய திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதும், இணையம் முழுவதும் பரவலாக இப்புகைப்படங்கள் கிடைக்கின்றன என்பதும் உறுதியானது.
தொடர்ந்து, அவரது சினிமா ஆர்வம், அஜித் குறித்து பேசிய செய்திகள் ஏதேனும் சர்வதேச, இந்திய, தமிழம ஊடகங்களில் வந்திருக்கிறதா என்று ஆராய்ந்தபோது, இதே போன்று அஜித்தின் வேதாளம் படம் குறித்த வதந்தி செய்தி ஒன்று கடந்த 2016 ஆம் ஆண்டே வைரலானது நமக்குத் தெரிய வந்தது.
எனவே, இதுகுறித்து நடிகர் அஜித்தின் மக்கள் தொடர்பு டீமிடம் தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது அவர்கள், இதுபோன்ற எந்த அறிவிப்பும் எங்களுக்கு வரவில்லை. புருநே நாட்டு இளவரசி இதுபோன்று எந்தவித அறிவிப்பையோ, விருப்பத்தையோ எவ்வகையிலும் தெரிவிக்கவில்லை. இது தவறாக பரப்பப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர்.
நான்கு குழந்தைகளுக்கு தாயான சரா, கடந்த 2004 ஆம் ஆண்டு புருநேவின் இளவரசர் அல் முக்தாதி பில்லாஹை மணந்தார். மிகமுக்கியமாக சரா, பேஷன் குறித்த விருப்பம் உள்ளவர். கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற பேஷன் கண்காட்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார் சரா.
ஆனால், அவருடைய சினிமா ஆர்வம் குறித்தோ, இந்திய சினிமாக்களை அவர் விரும்பியுள்ளார் என்பது குறித்தோ சர்வதேச அளவில் எந்த செய்தியும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Conclusion:
வலிமை திரைப்படத்தைப் பார்க்க சென்னைக்கு வருவேன் என்று புருநே நாட்டு இளவரசி கூறியதாகப் பரவும் புகைப்படத்தகவல் போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources:
CNN: https://edition.cnn.com/2017/08/30/asia/royal-duck-scarves-brunei/index.html
Brunei Sources: http://www.bruneiresources.com/papsarah.html
One india Tamil:https://tamil.oneindia.com/news/tamilnadu/the-princess-brunei-wants-meet-ajith-263083.html?story=3
RoyalWatcherBlog: https://royalwatcherblog.com/2019/04/09/crown-princess-sarah-of-brunei/
Muslimthaipost: http://news.muslimthaipost.com/news/32200
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.