ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact CheckPoliticsFactcheck: ஸ்டாலின் இந்துக்கள் ஓட்டு அவசியமில்லை என்றாரா?

Factcheck: ஸ்டாலின் இந்துக்கள் ஓட்டு அவசியமில்லை என்றாரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் இந்துக்கள் ஓட்டு போட்டு திமுக தேர்தலில் வெற்றி பெற வேண்டிய அவசியமில்லை என்று கூறியதாக புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றது.

ஸ்டாலின் குறித்து பரவும் தகவல்
Source: Facebook

வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களமே பரப்பரப்பாக உள்ளது. பிரச்சாரம், கூட்டணி,  தொகுதி பங்கீடு என அனைத்துக் கட்சிகளும் மிகவும் பிசியாக உள்ளது.

இவைகள் ஒருபுறம் இருந்தாலும், சமூக வலைத்தளங்களில் பிரபலமான ஊடகங்களின் புகைப்படச் செய்தி டெம்ப்ளேட்டுகளை பயன்படுத்தி தமிழகத்தின் முக்கியக் கட்சிகளின் அரசியல் தலைவர்கள் குறித்து  பொய் செய்தி பரப்பும் நிகழ்வும் மற்றொரு புறம் தொடர்ந்து நடந்துக் கொண்டு வருகின்றது.

இவ்வாறு பரப்பப்படும் செய்திகளை ஆய்வு செய்து, அச்செய்திகள் குறித்த உண்மைத்தன்மையை உரிய ஆதாரத்துடன் நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் வாசகர்களுக்கு விளக்கி வருகின்றோம்.

இந்த வரிசையில் ஸ்டாலின் அவர்கள்  குறித்து புகைப்படச் செய்தி ஒன்று தற்போது  சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.  அச்செய்தியில், “இந்துக்கள் ஓட்டு போட்டுதான் வரும் தேர்தலில் திமுக வெற்றி பெற அவசியமில்லை” என்று ஸ்டாலின் அவர்கள் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்புகைப்படச் செய்தியை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

ஸ்டாலின் குறித்து பரவும் பதிவு - 1
Source: Twitter

Archive Link:https://archive.ph/xpBc6

ஸ்டாலின் குறித்து பரவும் பதிவு - 2
Source: Facebook

Archive Link:https://archive.ph/4Cwiz

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இந்த புகைப்படச் செய்தியின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இதுக்குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

இந்துக்கள் ஓட்டு போட்டு வரும் தேர்தலில் திமுக வெற்றி பெற அவசியமில்லை என்று ஸ்டாலின் அவர்கள் கூறியதாக பரவும் புகைப்படச் செய்தியை காணும்போதே அது போலியான ஒன்றுதான் என்பதை நம்மால் யூகிக்க முடிகின்றது.

ஏனெனில்  வைரலாகும் புகைப்படச் செய்தியில் வழக்கமாக பயன்படுத்தப்படும் புதிய தலைமுறை லோகோ வாட்டர் இடம்பெறவில்லை. மேலும் இதில் இடம்பெற்றுள்ள  வார்த்தைகளும் எழுத்துப் பிழை மற்றும் இலக்கண பிழைகளுடன் உள்ளது. மேலும் இதன் டிசைன், எழுத்துரு(Font) போன்றவையும் வழக்கமான புகைப்படச் செய்தியை ஒத்திருக்கவில்லை.

ஆயினும்  இந்த புகைப்படச் செய்தி பொய்யானது என்பதை உறுதி செய்ய இதை முறைப்படி ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

ஆய்வின் முதற்படியாக இவ்வாறு ஒரு செய்தி புதிய தலைமுறையில் வந்ததா என்பதை அறிய புதிய தலைமுறையின் சமூக வலைத்தளப் பக்கங்களில் இச்செய்திக் குறித்து தேடினோம்.

ஆனால் நம் தேடலில் இவ்வாறு ஒரு செய்தி புதிய தலைமுறையில் வந்ததற்கான எந்த ஆதாரமும் நமக்கு கிடைக்கவில்லை.

ஆகவே ஆய்வின் அடுத்தப்படியாக புதியத் தலைமுறையின் டிஜிட்டல் செய்தித் துறையைத் தொடர்புக் கொண்டு இதுக்குறித்து கேட்டோம்.

அவர்கள்,

“இந்த நியூஸ்கார்ட் போலியான நியூஸ்கார்ட்”  

என்று நமக்கு பதிலளித்தனர்.

இதனடிப்படையில் பார்க்கும்போது ஸ்டாலின் குறித்து பரவும் புகைப்படச் செய்தி போலியானது என்பது நமக்கு உறுதியாகின்றது.

Conclusion

இந்துக்கள் ஓட்டு போட்டு திமுக தேர்தலில் வெற்றி பெற வேண்டிய அவசியமில்லை என்று ஸ்டாலின் கூறியதாகப் பரவும் புகைப்படச் செய்தி போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources

Twitter Profile: https://twitter.com/Ivankaprincess1/status/1369821220951101443

Facebook Profile: https://www.facebook.com/permalink.php?story_fbid=2086414188168220&id=100003989776537

Puthiya Thalaimurai News Team:-


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular