Fact Check
திராவிடத்தை வீழ்த்த ஆரியத்தை கைக்கொள்வது ஒன்றும் தவறில்லை என்றாரா சீமான்?
திராவிடத்தை வீழ்த்த ஆரியத்தை கைக்கொள்வது தவறில்லை என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கூறியதாகப் புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், சமீபத்தில் 50 ஆண்டுகளாக இந்த நாட்டை ஆள்வதற்கு கொடுத்து கணக்கிலடங்கா ஊழலை செய்து, எங்கள் நிலத்தின் வளத்தைக் கெடுத்து, மக்களின் நலத்தைக் கெடுத்து, காடு, மலை, ஏரி, குளம் எல்லாவற்றையும் அழித்து நாசமாக்க பார்க்கும்போது ஒரு தூய தமிழ் மகனுக்கு நெஞ்சும் வயிறும் எரியாமல் என்ன செய்யும்? என்பதாகப் பேசியிருந்தார்.
Also Read: மோடி, அமித் ஷா, யோகி ஆதித்யநாத் போன்ற மதவெறியர்களால் நாசமாய் போனேன் என்றாரா ஹெச்.ராஜா?
இந்நிலையில், “திராவிடத்தை வீழ்த்த ஆரியத்தை கைக்கொள்வது ஒன்றும் தவறில்லை. திராவிடமா? ஆரியமா? என்றால் நாம் தமிழர் கட்சி ஆரியத்தின் பக்கமே நிற்கும்.” என்று சீமான் கூறியதாக நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact check/ Verification:
திராவிடத்தை வீழ்த்த ஆரியத்தை கைக்கொள்வது ஒன்றும் தவறில்லை என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் கூறியதாகப் பரவும் நியூஸ் கார்டின் உண்மைத்தன்மை குறித்து அறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
குறிப்பிட்ட வைரல் நியூஸ் கார்டு ஐபிசி தமிழ் செய்திச்சேனலின் பெயரில் பரவுவதால் அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் இப்படி எதுவும் செய்தி வெளியாகியிருக்கிறதா என்று பார்த்தோம். ஏனெனில், எந்தவொரு முன்னணி செய்தி நிறுவனமும் சீமான் இவ்வாறு பேசியதாக செய்தி வெளியிட்டிருக்கவில்லை.
நம்முடைய ஆய்வில், ஐபிசி தமிழ் குறிப்பிட்ட அந்த நியூஸ் கார்டு போலியாக உருவாக்கப்பட்டது என்பதை தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுருப்பது நமக்குத் தெரிய வந்தது.
எனவே, சீமான் கூறியதாகப் பரவும் அந்த வைரல் நியூஸ் கார்டு போலியாக உருவாக்கப்பட்டது என்பது நமக்கு உறுதியானது.
Conclusion:
திராவிடத்தை வீழ்த்த ஆரியத்தை கைக்கொள்வது ஒன்றும் தவறில்லை என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் கூறியதாகப் பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources:
IBC Tamil: https://mobile.twitter.com/ibctamilmedia/status/1437760414939422724
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)