சுவாமி விவேகானந்தரின் அரிதிலும் அரிதான, அமெரிக்காவின் சிக்காகோ நகரின் பார்லிமெண்ட்டில் உரையாற்றிய வீடியோ என்று காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

சுவாமி விவேகானந்தர், 1893 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதியன்று அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற உலக ஆன்மீக மாநாட்டில் ஆற்றிய உரை பெரிதும் புகழ் பெற்றது.
இந்நிலையில், “அரிதிலும் அரிதான வீடியோ இது சுவாமி விவேகானந்தர். 13/09/1893.இல் அமெரிக்காவின் சிக்காகோ நகரில் பார்லிமென்ட் உரை. இந்துக்கள் புண்ணியம் பண்ணி இருக்க வேண்டும் இதை பார்ப்பதற்கு.” என்கிற பதிவுடன் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது.


சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் பின்னணியில் இருக்கும் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இதுக்குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification:
சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரையின் அரிதான வீடியோ என்று பரவும் சமூக வலைத்தளப் பதிவு குறித்த உண்மைத்தன்மை பற்றி அறிய அதுகுறித்து ஆய்வில் ஈடுபட்டோம்.
நமது ஆய்வில், அந்த குறிப்பிட்ட வீடியோ கடந்த 2018ம் ஆண்டு முதலே வைரலாவது நமக்குத் தெரிய வந்தது. மேலும், குறிப்பிட்ட வீடியோவில் வரும் காட்சிகள், நாடகம் அல்லது சினிமாவிற்காக எடுக்கப்பட்டது போன்று தோற்றமளித்தது.
இதுகுறித்து மேலும் அலசியபோது, குறிப்பிட்ட அந்த வீடியோ “விவேகானந்தா பை விவேகானந்தா” என்னும் திரைப்படத்தில் இருந்து கட் செய்து வெளியிடப்பட்ட வீடியோ என்பது நமக்குத் தெரிய வந்தது.
விவேகானந்தரின் உண்மையான சிகாகோ உரையை ரீகிரியேஷன் செய்து இந்த வீடியோவை குறிப்பிட்ட படத்திற்காக உருவாக்கியுள்ளனர். இயக்குனர் கார்த்திக் சர்குர் இயக்கத்தில், இத்திரைப்படம் வெளியாகியுள்ளது.
தமிழ், இந்தி, ஆங்கிலம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியான இத்திரைப்படம் தியேட்டர்களில் ரீலீஸ் செய்யப்படாமல், யூடியூப் மற்றும் டிவிடியாக சென்னை ராமகிருஷ்ண மடம் மூலமாக தயாரித்து, வெளியிடப்பட்டுள்ளது. இதில் விவேகானந்தராக பாலாஜி மனோகர் என்பவர் நடித்துள்ளார்.
இத்திரைப்படத்தின் முழு தமிழ் வடிவம், ராமகிருஷ்ண மடத்தின் யூடியூப் பக்கத்தில் காணக்கிடைக்கிறது. அதனையும் இங்கே இணைத்துள்ளோம்.
Conclusion:
சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரையின் அரிதான வீடியோ என்று பரவும் சமூக வலைத்தளப் பதிவு என்பதை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் எடுத்துக் காட்டியுள்ளோம்.
எனவே, வாசகர்கள் யாரும் அச்செய்தியை பகிர வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
Result: False
Our Sources:
SRI RAMAKRISHNA MATH: https://youtu.be/b8WFLhUdJVE
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)