Politics
உளவுத்துறை திமுக தோல்வியடையும் என்று தெரிவித்ததா?
நடக்கவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியடையும் என்று உளவுத்துறை தெரிவித்ததாக நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

அடுத்த மாதம் 6-ஆம் தேதி நடக்கவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தல் காரணமாக தமிழம் முழுவதுமே பரப்பரப்பாக உள்ளது.
இந்நிலையில் இத்தேர்தலில் தமிழகத்தின் முக்கியக் கட்சியாகவும், தற்போதைய எதிர்க்கட்சியாகவும் விளங்கும் திமுக படுதோல்வி அடையும் என உளவுத்துறை தெரிவித்ததாக நியூஸ் 7 தமிழின் புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

Archive Link: https://archive.ph/zHkHG

Archive Link: https://archive.ph/6DibT

Archive Link: https://archive.ph/Y1V2G
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
நடக்கவிருக்கும் தேர்தலில் திமுக தோல்வியடையும் என்று உளவுத்துறை தெரிவித்ததாக பரப்பப்படும் புகைப்படச் செய்தியைக் காணும்போதே அது போலியாக எடிட் செய்யப்பட்ட ஒன்றுதான் என்பதை நம்மால் கணிக்க முடிகின்றது.
ஏனெனில் நியூஸ் 7 தமிழில் வழக்கமாக பயன்படுத்தும் டிசைன், எழுத்துறு (Font) ஆகியவை இதில் காணப்படவில்லை. மேலும் இத்தகவலை உளவுத்துறை தெரிவித்ததாக இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உளவுத்துறை ஆட்சியில் இல்லாத தனிப்பட்ட ஒரு கட்சிக் குறித்து ரகசியமாக ஆய்வு செய்த செய்தி, இவ்வாறு வெளிப்படையாக செய்தியாக வந்துள்ளது என்பது நம்பும்படி இல்லை.
ஆயினும் இவற்றையெல்லாம் உறுதி செய்ய, இவ்வாறு ஒரு செய்தி நியூஸ் 7 தமிழில் வெளிவந்துள்ளதா என்பதை நியூஸ் 7 தமிழின் சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடினோம்.
இந்த தேடலில் வைரலாகும் இந்தப் புகைப்படச் செய்திக் குறித்து நியூஸ் 7 தமிழ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு ஒன்றை நம்மால் காண முடிந்தது.
அதில்,
“நியூஸ்7 தமிழ் வெளியிட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் தவறான செய்தி!”
என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மேற்காணும் டிவிட்டர் பதிவின் அடிப்படையில் பார்க்கும்போது, தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியடையும் என்று உளவுத்துறை தெரிவித்ததாக பரவும் தகவல் முற்றிலும் தவறானது என்பது உறுதியாகின்றது.
Conclusion
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியடையும் என்று உளவுத்துறை தெரிவித்ததாக பரவும் புகைப்படச் செய்தி போலியாக எடிட் செய்யப்பட்டது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
News 7 Tamil’s Twitter Handle: https://twitter.com/news7tamil/status/1372878607161327618
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)