Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Politics
பாகிஸ்தானில் மசூதியை இடித்து இரும்பு மற்றும் செங்கற்களை உணவுக்காக விற்பதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

“பாகிஸ்தானில், மசூதியை இடித்து அதில் உள்ள இரும்பு மற்றும் செங்கற்களை உணவுக்காக விற்கின்றனர், சமீபத்தில் இடிக்கப்படும் 3வது மசூதி இதுவாகும். (அல்லாஹ்) நமக்கு உணவு தரவில்லை என்றால் மஸ்ஜித்களின் தேவை என்று இஸ்லாமியர் கோபத்தில் இடிக்கிறார்கள்” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: வேலுப்பிள்ளை பிரபாகரனின் தற்போதைய புகைப்படம் என்று பரவும் எடிட் செய்யப்பட்ட புகைப்படம்!
பாகிஸ்தானில் மசூதியை இடித்து இரும்பு மற்றும் செங்கற்களை உணவுக்காக விற்பதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, இத்தகவல் உண்மையானதா என்பதை உறுதி செய்ய, வைரலாகும் வீடியோவை ஒவ்வொரு புகைப்படமாக பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி இவ்வீடியோ குறித்து தேடினோம்.
இத்தேடலானது பிப்ரவரி 3, 2023 அன்று ‘Pak police watch as Islamists vandalise Ahmadi ‘mosque’ in Karachi | Details’ (அஹ்மது மசூதியில் இஸ்டாமியர்கள் இடிப்பதை பாகிஸ்தான் போலீசார் பார்த்துக்கொண்டிருந்தனர்) என்று தலைப்பிட்டு ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டிருந்த செய்திக்கு நம்மை அழைத்துச் சென்றது
“கராச்சியில் இருக்கும் சிறுபான்மையரான அஹ்மதி இனத்தை சார்ந்தவர்களின் வழிபாட்டுத் தலத்தை பாகிஸ்தானி இஸ்லாமியர்கள் இடித்தனர். கலவரக்காரர்கள் சிறுபான்மையரின் வழிபாட்டுத் தலத்தை இடித்ததாக தி எக்ஸ்பிரஸ் டிரிபியூன் செய்தி வெளியிட்டுள்ளது. அஹ்மதியரகள் வழிபாட்டுத் தலத்தை மசூதி என்று அழைக்கக் கூடாது என்று பாகிஸ்தான் சட்டம் தடை விதித்துள்ளது. இடிக்கப்பட்ட அஹ்மதியா ஹால் 1950களில் கட்டப்பட்டது. சம்பவம் நடந்த இடத்தில் போலீசார் இருந்தாலும், இதை தடுக்க எந்த வித முயற்சியும் செய்யவில்லை. கலவரக்காரர்கள் மீது முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யவில்லை” என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டிருந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்ததை காண முடிந்தது.
தொடர்ந்து தேடியதில் தி எக்ஸ்பிரஸ் டிரிபியூன் இந்நிகழ்வு குறித்து வெளியிட்டிருந்த செய்தியை காண முடிந்தது. அதில் தாக்குதலுக்கு உள்ளான அஹ்மதியா ஹால் 1950களில் கட்டப்படது என்று இந்த அமைப்பை சார்ந்தவர்கள் கூறியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அஹ்மதி இனத்தின் மக்கள் தொடர்பாளர் இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்ததாகவும், போலீசார் கலவரக்காரர்களை தடுக்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டியதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. பாகிஸ்தானில் தொடர்ந்து சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின்றது என்று அவர் தெரிவித்ததாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை தவிர்த்துமேலும் சில ஊடகங்களில் இச்சம்பவம் குறித்து செய்தி வந்திருந்ததை நம்மால் காண முடிந்தது. அவற்றை இங்கே, இங்கே, மற்றும் இங்கே காணலாம்.
1889-ல் மிர்ஸா குலாம் அஹ்மத் என்பவர் ஒருங்கிணைந்த பஞ்சாபில் அஹ்மதி எனும் இனப்பிரிவை தோற்றுவித்தார். இந்த இனப்பிரிவை சார்ந்தவர்கள் மீது தொடர்ந்து பல அடக்குமுறைகள் பாகிஸ்தானில் நடந்தேறி வருகின்றது. 1974-ல் அஹ்மதியர்கள் முஸ்லிம்களே அல்ல என பாகிஸ்தான் பாராளுமன்றம் அறிவித்தது. இதனையடுத்து அவர்கள் வழிபாடு பிரச்சாரம் செய்யவும், சவூதி அரேபியாவுக்கு ஆன்மீக பயணம் செய்யவும் தடை விதிக்கப்பட்டது.
பாகிஸ்தானில் அஹ்மதியர்களுக்கு எதிராக நடக்கப்படும் கொடுமைகள் குறித்து பல ஆண்டுகளாக ஊடகளில் செய்தி வருவதை நம்மால் காண முடிந்தது. அச்செய்திகள் இங்கே, இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் காண்கையில் நமக்கு தெளிவாகுவது என்னவென்றால், பாகிஸ்தானில் மசூதியை இடித்து இரும்பு மற்றும் செங்கற்களை உணவுக்காக விற்பதாக பரவும் வீடியோ தகவல் தவறானதாகும். உண்மையில் அந்த வீடியோ அஹ்மதியர்கள் எனும் சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலத்தை பாகிஸ்தான் முஸ்லீம்கள் இடிக்கும்போது எடுக்கப்பட்டதாகும்.
Also Read: பிரபாகரன் என் நெஞ்சில் தூங்குவார் என்று சீமான் கூறியதாக பரவும் எடிட் வீடியோ!
பாகிஸ்தானில் மசூதியை இடித்து இரும்பு மற்றும் செங்கற்களை உணவுக்காக விற்பதாக பரவும் தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
(இச்செய்தியானது நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் ஏற்கனவே பிரசுரமாகியுள்ளது)
Sources
Report By Hindustan Times, Dated February 4, 2023
Report By The Express Tribune, Dated February 3, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
February 14, 2023
Vijayalakshmi Balasubramaniyan
August 4, 2025
Ramkumar Kaliamurthy
May 28, 2025