விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் என் நெஞ்சில் தூங்குவார் என்று சீமான் கூறியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
வைரலாகும் வீடியோவில் நெறியாளர் பிரபாகரன் புகைப்படத்தை காட்டி இவர் குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என கேட்கிறார். அதற்கு காலை நேரங்களில் அவர் நெஞ்சில் படுத்து தூங்குவார், அதை தவற விடுகிறேன் என்று சீமான் பதிலளிக்கிறார். இந்த வீடியோவை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து, இதுக்குறித்த தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: வேலுப்பிள்ளை பிரபாகரனின் தற்போதைய புகைப்படம் என்று பரவும் எடிட் செய்யப்பட்ட புகைப்படம்!
Factcheck / Verification
பிரபாகரன் என் நெஞ்சில் தூங்குவார் என்று சீமான் கூறியதாக வீடியோ ஒன்று வைரலானதைத் தொடர்ந்து, இதுக்குறித்து ஆய்வு செய்தோம். அதில் வைரலாகும் வீடியோ எடிட் செய்யப்பட்டது என அறிய முடிந்தது.
வைரலாகும் வீடியோவில் கலாட்ட யூடியூப் சேனலின் லோகோ இடம்பெற்றிருந்ததால், அந்த சேனலின் யூடியூப் பக்கத்தில் சீமானின் மேற்கண்ட நேர்காணல் குறித்து தேடினோம்.
இத்தேடலில் மார்ச் 28, 2021 அன்று வைரலாகும் நேர்காணல் வெளியிடப்பட்டிருப்பதை காண முடிந்தது. அதில் சீமானிடம் (5 நிமிடம் 43 வினாடியில்) அவர் மகன் குறித்து கேள்வி கேட்கப்படுகையில் , “காலை நேரங்களில் அவர் நெஞ்சில் படுத்து தூங்குவார், அதை தவற விடுகிறேன்” என பதில் அளித்துள்ளார்.
பிரபாகரன் குறித்த கேள்விக்கு, (8 நிமிடம் 34 வினாடியில்) “அவர் என் அண்ணன், என் இனத்தின் அடையாளம், ஒழுக்கத்தில் சிறந்தவர், அனைவருடனும் மரியாதையுடன் பேசுபவர், அவருடன் பேசினால் அவருக்காக உயிரையும் கொடுக்க தோன்றும்.. “என்றெல்லாம் பேசியுள்ளார்.
கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் காண்கையில், சீமானின் மகன் குறித்து கேள்விக்கு அவர் அளித்த பதிலை, பிரபாகரன் குறித்து பேசியதாக வெட்டி ஒட்டி தவறாக பரப்பப்பட்டு வருகின்றது என்பது தெளிவாகின்றது.
Also Read: இன்பநிதி பெண் ஒருவரை முத்தமிட்டதாக பரவும் புகைப்படம்!
Conclusion
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் என் நெஞ்சில் தூங்குவார் என்று சீமான் கூறியதாக பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Altered Video
Sources
Youtube Video fro Galatta Dated March 28, 2021
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)