Fact Check
பெட்ரோல் டீசல் விலையைக் கண்டித்து சைக்கிளில் வந்து வாக்களித்தாரா நடிகர் விஜய்?

பெட்ரோல், டீசல் விலையைக் கண்டிக்கும் வகையில் நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தார் என்று செய்தி ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகியது.

தமிழகத்தில் தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் துவங்கி தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சாமானியர்களின் தலைவிதியை சாமானியர்களே தீர்மானிக்கும் தேர்தலாக இது இருக்கும் என்கிற கருத்துக்கள் மக்களிடையே நிலவுகிறது.
இந்நிலையில், இன்று காலை 9 மணியளவில் நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிப்பதற்காக நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தார்.

Archived Link: https://archive.ph/ArkBf
இதனைத் தொடர்ந்து, பெட்ரோல் டீசல் விலையைக் கண்டிக்கும் வகையில் நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்ததாக சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
Archived Link: https://archive.ph/CwECD
Archived Link: https://archive.ph/CXRuC
Archived Link: https://archive.ph/hva72
Archived Link: https://archive.ph/UZPKL
Archived Link: https://archive.ph/8yqTM
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification:
பெட்ரோல், டீசல் விலையைக் கண்டித்து நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தார் என்கிற செய்தி சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், அவரது அதிகாரப்பூர்வ மக்கள் தொடர்பாளரான ரியாஸ்.கே.அகமது தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் இதுதொடர்பான விளக்கத்தை வெளியிட்டுள்ளார்.
Archived Link: https://archive.ph/8pW59
அதில், “தளபதி விஜய் சைக்கிளில் வாக்களிக்க வருவதற்கான காரணம் வாக்குச்சாவடி அருகில் இருந்ததும், குறுகலான சாலையில் காரில் வருவது கடினமானது என்பதுமே ஆகும். இதில் வேறெந்த உள்நோக்கமும் இல்லை” என்று விளக்கமளித்துள்ளார்.

Conclusion:
பெட்ரோல், டீசல் விலையைக் கண்டித்து நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தார் என்பதாகப் பரவிய கருத்து தவறானதாகும் என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Misleading
Our Sources:
Twitter: https://twitter.com/RIAZtheboss/status/1379325005247381508
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)