வியாழக்கிழமை, ஏப்ரல் 25, 2024
வியாழக்கிழமை, ஏப்ரல் 25, 2024

HomeFact Checkநடிகை கஸ்தூரி அதிமுகவில் இணைந்ததாக பரவும் வதந்தி!

நடிகை கஸ்தூரி அதிமுகவில் இணைந்ததாக பரவும் வதந்தி!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: நடிகை கஸ்தூரி அதிமுகவில் இணைந்தார்
Fact: இத்தகவல் பொய்யானது என்று கஸ்தூரி மறுத்துள்ளார்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நடிகை கஸ்தூரி அதிமுகவில் தன்னை உறுப்பினராக இணைத்துக் கொண்டார் என்று குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமியுடன் அவர் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

நடிகை கஸ்தூரி அதிமுகவில் இணைந்ததாக பரவும் தகவல்
Screengrab from Twitter@DrMahesraja
நடிகை கஸ்தூரி அதிமுகவில் இணைந்ததாக பரவும் தகவல்
Screengrab from Facebook/Kavin Solaimalai
நடிகை கஸ்தூரி அதிமுகவில் இணைந்ததாக பரவும் தகவல்
Screengrab from Facebook/charles.pushparaj14111997

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: பாலிவுட் நடிகர் ஷாருக் கான் சமீபத்தில் அவரது கல்லூரி சான்றிதழை வெளியிட்டதாக பரவும் 2016 ஆம் ஆண்டு படம்!

Factcheck / Verification

நடிகை கஸ்தூரி அதிமுகவில் இணைந்ததாக தகவல் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம். முன்னதாக வைரலாகும் தகவலுடன் பரப்பப்படும் புகைப்படத்தின் உண்மை பின்னணி குறித்து அறிய அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அப்படம் குறித்து தேடினோம்.

இத்தேடலில் அந்த படம் 4 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட பழைய படம் என்பதை அறிய முடிந்தது. கடந்த 2018 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த சமயத்தில் நடிகை கஸ்தூரியை சந்தித்துள்ளார். இதுக்குறித்து நடிகை கஸ்தூரி அவரது டிவிட்டர் பக்கத்தில் டிவீட் ஒன்றை பதிவிட்டுள்ளதை நம்மால் காண முடிந்தது.

இச்சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்தே கஸ்தூரி அதிமுகவில் இணைந்ததாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றது.

தொடர்ந்து  தேடுகையில், நடிகை கஸ்தூரியே அதிமுகவில் அவர் இணைந்ததாக வைரலாகும் தகவல் தவறானது என்பதை தெளிவு செய்து வீடியோ ஒன்றை பதிவிட்டு, அதை அவரின் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருப்பதை நம்மால் காண முடிந்தது.

Also Read: ரஷ்ய பாராளுமன்றத்தில் காமராஜர் படம் இடம்பெற்றிருப்பதாக பரவும் எடிட் செய்யப்பட்ட படம்!

Conclusion

நடிகை கஸ்தூரி அதிமுகவில் இணைந்ததாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் முற்றிலும் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Tweet from @KasthuriShankar, Dated Dec 08, 2018
Tweet from @KasthuriShankar, Dated Apr 05, 2023

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular