Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.
Claim: பாலிவுட் நடிகர் ஷாருக் கான் சமீபத்தில் அவரது கல்லூரி சான்றிதழை வெளியிட்டார்
Fact: வைரலாகும் புகைப்படம் 2016 ஆம் ஆண்டில் வெளிவந்ததாகும்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் மோடியின் முதுநிலை பட்டப் படிப்பின் சான்றிதழை தகவல் அறியும் சட்டம் வழியாக கோரியிருந்தார். இதுகுறித்த வழக்கில் பிரதமர் சான்றிதழ் குறித்து விவரம் பொது வெளியில் கிடைக்கின்றது. உள்நோக்கத்தோடன் போடப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்வதோடு, நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததற்காக டில்லி முதல்வருக்கு ₹25000 அபராதம் விதிக்கப்படுவதாக குஜராத் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து பிரதமர் மோடியின் கல்வித்தகுதி குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் நடந்து வருகின்ற நிலையில், பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கான் அவரது பட்டப்படிப்பு சான்றிதழை பொது வெளியில் வெளியிட்டதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: கொரோனா பரவலால் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் மீண்டும் முழு ஊரடங்கு என்று பரவும் வதந்தி!
Factcheck / Verification
பாலிவுட் நடிகர் ஷாருக் கான் சமீபத்தில் அவரது கல்லூரி சான்றிதழை பொதுவெளியில் வெளியிட்டதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியதை தொடர்ந்து, அப்படத்தின் உண்மை பின்னணி குறித்து அறிய அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அப்படம் குறித்து தேடினோம்.
இத்தேடலில் வைரலாகும் புகைப்படம் 2016 ஆம் ஆண்டு அவரது திரைப்பட பிரமோஷனின்போது எடுக்கப்பட்டது என்பது இந்தியா டுடே பிப்ரவரி 17, 2016 ஆம் ஆண்டு வெளியிட்ட செய்தியின் வாயிலாக தெரிய வந்தது.
2016 ஆம் ஆண்டில் ஷாருக் கான் நடிப்பில் வெளிவந்த ஃபேன் திரைப்படத்தின் புரொமோஷனுக்காக, டெல்லியில் அவர் படித்த கல்லூரிக்கு சென்றுள்ளார். இச்சமயத்தில் 28 ஆண்டுகளாக அவர் வாங்காமல் வைத்திருந்த அவரது இளங்கலை பட்டப்படிப்பின் சான்றிதழ் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இத்தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படமே, ஷாருக் கான் பிரதமரை கேலி செய்யும் விதமாக அவரது பட்டப்படிப்பு சான்றிதழை வெளியிட்டதாக திரித்து கூறி சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகின்றது.
ஷாருக் கான் சான்றிதழ் பெற்ற செய்தியானது அச்சமயத்தில் பல ஊடகங்களில் செய்தியாக வெளிவந்திருந்தது. அவற்றை இங்கே, இங்கே, மற்றும் இங்கே காணலாம்.
Also Read: ரஷ்ய பாராளுமன்றத்தில் காமராஜர் படம் இடம்பெற்றிருப்பதாக பரவும் எடிட் செய்யப்பட்ட படம்!
Conclusion
பாலிவுட் நடிகர் ஷாருக் கான் அவரது கல்லூரி சான்றிதழை சமீபத்தில் பொதுவெளியில் வெளியிட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் முற்றிலும் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Missing Context
Our Sources
Report from India Today, Dated February 17, 2016
Report from India.com, Dated March 09, 2016
Report from NDTV, Dated February 17, 2016
Report from Hindustan Times, Dated February 17, 2016
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.