Claim: ஆதிபுருஷ் ஓடும் திரையரங்கில் 9 இருக்கைகள் ஒதுக்க வேண்டும் என்றார் அர்ஜூன் சம்பத்
Fact: இத்தகவல் பொய்யானது என்று அர்ஜூன் சம்பத் மறுத்துள்ளார்.
ஆதிபுருஷ் திரைப்படம் வரும் ஜூன் 16 ஆம் தேதி திரைக்கு வர இருக்கின்றது. இத்த்திரைப்படம் ஓடும் திரையரங்குகளில் அனுமானுக்காக ஒரு இருக்கை விடப்படும் என்று படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், “இயக்குனர் அனுமார் பக்தர் என்பதால், அனுமாருக்கு மட்டும் இருக்கை ஒதுக்குவதை ஏற்க முடியாது. ராமர், சீதை, லட்சுமணர், அனுமர், பரதன், வாலி, சுக்ரிவன், அணில், குதிரை ஆகிய அனைவருக்கும் மொத்தம் 9 இருக்கைகள் ஒதுக்க வேண்டும். இல்லாவிட்டால், திரையரங்குகள் முன்பு இந்து மக்கள் கட்சி அரைநிர்வான போராட்டம் நடத்தும்” என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: கர்நாடகாவில் ரயிலை கவிழ்க்க சதியா? வைரலாகும் வீடியோவின் உண்மை பின்னணி!
Fact Check/Verification
ஆதிபுருஷ் ஓடும் திரையரங்கில் 9 இருக்கைகள் ஒதுக்க வேண்டும் என்று அர்ஜூன் சம்பத் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆராய்ந்தோம்.
வைரலாகும் நியூஸ்கார்டானது கதிர் நியூஸின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.
இத்தேடலில் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை அந்நிறுவனம் வெளியிட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை.
இதனையடுத்து கதிர் நியூஸை சேர்ந்த் பிரதீப் குமாரைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட குறித்து விசாரித்ததில், அந்த நியூஸ்கார்ட் போலியானது என அவர் தெரிவித்தார்.
இதனையடுத்து அர்ஜூன் சம்பத்தை தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து விசாரித்தோம். அவர் இத்தகவல் பொய்யானது என்று பதிலளித்தார்.
Also Read: Fact Check: முகமது ஷெரீப் அகமது என்ற பெயர் கொண்ட ஒடிசா ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டர் தலைமறைவா?
Conclusion
ஆதிபுருஷ் ஓடும் திரையரங்கில் 9 இருக்கைகள் ஒதுக்க வேண்டும் என்று அர்ஜூன் சம்பத் கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Conversation With Arjun Sampath, Founder and President, Hindu Makka Katchi, Dated June 08, 2023
Conversation With Pradeep Kumar, Kathir News, Dated June 08, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)