புதன்கிழமை, ஏப்ரல் 24, 2024
புதன்கிழமை, ஏப்ரல் 24, 2024

HomeFact Checkஉதயநிதி ஸ்டாலின் மகன் இன்பநிதியை ‘சின்ன சின்னவர்’ என்று ராஜீவ் காந்தி குறிப்பிட்டாரா?

உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பநிதியை ‘சின்ன சின்னவர்’ என்று ராஜீவ் காந்தி குறிப்பிட்டாரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பநிதியை ‘சின்ன சின்னவர்’ என்று குறிப்பிட்டு திமுக செய்தி தொடர்பு இணைச் செயலாளர்  ராஜீவ் காந்தி டிவீட் செய்ததாக ஸ்கிரீன்ஷாட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பநிதியை ‘சின்ன சின்னவர்’ என்று குறிப்பிட்டு ராஜீவ் காந்தி டிவீட் செய்ததாக பரவும் தகவல் .

உதயநிதி தன் மகன் இன்பநிதியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை அவரது டிவிட்டர் பக்கத்தில் சமீபத்தில் பகிர்ந்திருந்தார்.

ராஜீவ் காந்தி இப்பத்திவை மேற்கோள் காட்டி, இன்பநிதியை சின்ன சின்னவர் என்று குறிப்பிட்டு ட்வீட் செய்ததாக ஸ்க்ரீன்ஷாட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பநிதியை ‘சின்ன சின்னவர்’ என்று குறிப்பிட்டு ராஜீவ் காந்தி டிவீட் செய்ததாக பரவும் தகவல்  - 01

Twitter Link | Archive Link

உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பநிதியை ‘சின்ன சின்னவர்’ என்று குறிப்பிட்டு ராஜீவ் காந்தி டிவீட் செய்ததாக பரவும் தகவல்  - 02

Facebook Link

உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பநிதியை ‘சின்ன சின்னவர்’ என்று குறிப்பிட்டு ராஜீவ் காந்தி டிவீட் செய்ததாக பரவும் தகவல்  - 03

Facebook Link

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: என் காலில் விழுந்து பதவி பெற்ற நாய் ஒன்று கட்சியை கவ்வி சென்றுவிட்டது என்றாரா சசிகலா?

Fact Check/Verification

உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பநிதியை ‘சின்ன சின்னவர்’ என்று குறிப்பிட்டு திமுக செய்தி தொடர்பு இணைச் செயலாளர்  ராஜீவ் காந்தி டிவீட் செய்ததாக வைரலாகும் ஸ்க்ரீன்ஷாட்டின் உண்மைத்தன்மை குறித்து அறிய டிவிட்டர் அட்வான்ஸ்ட் சர்ச் (Twitter Advanced Search) முறையை பயன்படுத்தி வைரலாகும் டிவீட் குறித்து தேடினோம்.

இவ்வாறு தேடியதில் ராஜீவ் காந்தி டிவீட் செய்ததாக வைரலாகும் ஸ்க்ரீன்ஷாட்டின் பின்புலத்தில் இருந்த உண்மைத்தன்மை நமக்கு தெளிவாகியது.

உண்மையில் ராஜீவ் காந்தி பதிவிட்டதாக வைரலாகும் டிவீட், ராஜீவ் காந்தி அவர்களால் பதிவிட்டதே அல்ல; அது ராஜீவ் காந்தி பெயரில் இயங்கும் போலிக் கணக்கிலிருந்து பதிவிட்டதாகும்.

Archive Link

ராஜீவ் காந்தியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கின் ஐடி @rajiv_dmk என்பதாகும். ஆனால் வைரலாகும் டிவீட் @rajiiv_dmk (இதில் ஒரு ‘l’ கூடுதலாக உள்ளது) என்கிற ஐடியிலிருந்து பதிவிடப்பட்டுள்ளது. மேலும் அந்த ஐடியில் ‘சொம்பு’ என்ற வார்த்தை இடம்பெற்றிருப்பதை நம்மால் காண முடிந்தது.

Parody Account
Screen shot of Parody Account

வாசகர்களின் புரிதலுக்காக ராஜீவ் காந்தியின் உண்மையான டிவிட்டர் கணக்கையும், அவர் பெயரில் இயங்கும் போலி கணக்கையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

Comparison image

Also Read: சோற்றுக்காக தமிழரென்பவர் நானல்ல என்று முதல்வர் ஸ்டாலினை மறைமுகமாக விமர்சித்தாரா ஊடகவியலாளர் விஷன்?

Conclusion

உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பநிதியை ‘சின்ன சின்னவர்’ என்று குறிப்பிட்டு திமுக செய்தி தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி டிவீட் செய்ததாக சமூக வலைத்தளங்களில் பரவும் ஸ்க்ரீன்ஷாட் உண்மையில் அவர் பெயரில் இயங்கும் போலிக் கணக்கில் பதிவிடப்பட்டது என்பதை கிடைத்த ஆதாரங்களின் மூலம் தெளிவாகின்றது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False/ImposterContent

Sources

Tweet, Rajiv Gandhi Parody Account’s Thread, Dated on June 30, 2022


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular