திங்கட்கிழமை, நவம்பர் 25, 2024
திங்கட்கிழமை, நவம்பர் 25, 2024

HomeFact CheckFact Check: பாஜக தலைவர்களின் ஆடியோ, வீடியோ ஆதாரங்கள் அண்ணாமலையிடம் சிக்கியுள்ளது என்றாரா நிர்மல்குமார்?

Fact Check: பாஜக தலைவர்களின் ஆடியோ, வீடியோ ஆதாரங்கள் அண்ணாமலையிடம் சிக்கியுள்ளது என்றாரா நிர்மல்குமார்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: பாஜக தலைவர்களின் ஆடியோ, வீடியோ ஆதாரங்கள் அண்ணாமலையிடம் சிக்கியுள்ளது என்றார் சிடிஆர் நிர்மல்குமார்

Fact: இத்தகவல் தவறானது என்று சிடிஆர் நிர்மல்குமார் மறுத்துள்ளார்

பாஜக தலைவர்கள் பலரின் ஆடியோ, வீடியோ ஆதாரங்கள் அண்ணாமலையிடம் சிக்கியுள்ளதாக பாஜகவிலிருந்து நிர்மல்குமார் கூறியதாக நியூஸ்கார்டுகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

பாஜக தலைவர்களின் ஆடியோ, வீடியோ ஆதாரங்கள் அண்ணாமலையிடம் சிக்கியுள்ளது என்று நிர்மல்குமார் கூறியதாக பரவும் தகவல்
Screengrab from Twitter@AcuranTivi
பாஜக தலைவர்களின் ஆடியோ, வீடியோ ஆதாரங்கள் அண்ணாமலையிடம் சிக்கியுள்ளது என்று நிர்மல்குமார் கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.
Screengrab from Twitter@jaya2016maha

வைரலாகும் இப்பதிவுகளின் சேமிப்பு பதிவுகளை இங்கே, மற்றும் இங்கே காணலாம்.

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: ராகுல் காந்தி தனது பெயரில் காந்தியை நீக்கி ‘ராகுல் ராஜீவ் ஃபெரோஸ்’ என குறிப்பிட்டதாக பரவும் எடிட் செய்யப்பட்ட படம்!

Factcheck / Verification

பாஜக தலைவர்களின் ஆடியோ, வீடியோ ஆதாரங்கள் அண்ணாமலையிடம் சிக்கியுள்ளது என்று நிர்மல்குமார் கூறியதாக தகவல் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

வைரலாகும்  இத்தகவல் புதிய தலைமுறை மற்றும் ஜூனியர் விகடனின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டுகளை பயன்படுத்தி பரப்பப்படுவதால், இந்நிறுவனங்கள் இவ்வாறு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அவற்றின் சமூக ஊடகப் பக்கங்களை ஆராய்ந்தோம். அதில் இந்த நியூஸ்கார்டுகளை இந்நிறுவனங்கள் வெளியிட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை.

இதனையடுத்து விகடன் ஆசிரியர்களுள் ஒருவரான பிரிட்டோவைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் ஜூனியர் விகடன் நியூஸ்கார்ட் குறித்து விசாரிக்கையில், அவர் ‘அந்த நியூஸ்கார்ட் போலியானது, அதை நாங்கள் வெளியிடவில்லை’ என்று தெளிவுப்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து புதிய தலைமுறை டிஜிட்டல் தலைவர் இவானியைத் தொடர்புக் கொண்டு புதிய தலைமுறை நியூஸ்கார்ட் குறித்து விசாரித்தோம். அவரும் ‘வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது’ என்று உறுதி செய்தார்.

இதனையடுத்து சிடிஆர் நிர்மல்குமாரை தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து விசாரிக்கையில், ‘இத்தகவல் முற்றிலும் பொய்யானது’ என்று மறுப்பு தெரிவித்தார்.

Also Read: Fact Check: அமைச்சர் சக்கரபாணியின் காலில் விழுந்த மாணவிகள் என்று பரவும் தவறான செய்தி!

Conclusion

பாஜக தலைவர்களின் ஆடியோ, வீடியோ ஆதாரங்கள் அண்ணாமலையிடம் சிக்கியுள்ளது என்று நிர்மல்குமார் கூறியதாக சமூக ஊடகங்களில் பரவும் தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources

Phone Conversation with CTR Nirmal Kumar, dated March 10, 2023
Phone Conversation with I.Britto, Editor, Vikatan, dated March 10, 2023
Phone Conversation with Ivany, Digital Head, Puthiya Thalaimurai, dated March 10, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular