வியாழக்கிழமை, ஏப்ரல் 25, 2024
வியாழக்கிழமை, ஏப்ரல் 25, 2024

HomeFact Checkகழுதைப்புலி சீமான்போல ‘புஹாஹாஹா..’ என சிரிப்பதாக தினமலர் செய்தி வெளியிட்டதா?

கழுதைப்புலி சீமான்போல ‘புஹாஹாஹா..’ என சிரிப்பதாக தினமலர் செய்தி வெளியிட்டதா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

கழுதைப்புலி சீமான்போல ‘புஹாஹாஹா..’ என சிரிக்கும் என்று தினமலர் செய்தி வெளியிட்டதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

கழுதைப்புலி சீமான்போல  சிரிக்கும் என்று தினமலர் செய்தி வெளியிட்டதாக பரவும் நியூஸ்கார்ட்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ‘புஹாஹாஹா..’ என்று சிரிப்பதாக சமூக ஊடகங்களில் தொடர்ந்து கேலி செய்யப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் கழுதைப்புலி சீமான் போல ‘புஹாஹாஹா..’ என சிரிப்பதன் காரணம் இதுதான்! என்று தலைப்பிட்டு தினமலர் செய்தி வெளியிட்டதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

கழுதைப்புலி சீமான்போல  சிரிக்கும் என்று தினமலர் செய்தி வெளியிட்டதாக பரவும் நியூஸ்கார்ட் - 01
Screenshot from Twitter @Alien18R
கழுதைப்புலி சீமான்போல  சிரிக்கும் என்று தினமலர் செய்தி வெளியிட்டதாக பரவும் நியூஸ்கார்ட் - 02
Screenshot from Twitter @GuyFawkes_____
கழுதைப்புலி சீமான்போல  சிரிக்கும் என்று தினமலர் செய்தி வெளியிட்டதாக பரவும் நியூஸ்கார்ட் - 03
Screenshot from Twitter @Mark2Kali_

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: பிரான்ஸில் சாலையில் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் அகற்றப்பட்டனரா? உண்மை என்ன?

Fact Check/Verification

கழுதைப்புலி சீமான்போல ‘புஹாஹாஹா..’ என சிரிக்கும் என்று தினமலர் செய்தி வெளியிட்டதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

தினமலர் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி இத்தகவல் பரப்பப்படுவதால், அந்நிறுவனத்தின் சமூக ஊடக பக்கங்களில் இதுக்குறித்து தேடினோம்.  இத்தேடலில் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என்பதை அறிய முடிந்தது.

உண்மையில் ‘கழுதைப்புலி ‘புஹாஹாஹா..’ என மனிதர்கள்போல சிரிப்பதன் காரணம் இதுதான்!’  தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது. இதில் மனிதர்கள் என்ற வார்த்தையை சீமான் என்று எடிட் செய்து மாற்றி பரப்பி சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர்.

வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும், எடிட் செய்த நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

Also Read: எடப்பாடி பழனிச்சாமியின் படத்தை அழித்தனரா சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள்?

Conclusion

கழுதைப்புலி சீமான்போல ‘புஹாஹாஹா..’ என சிரிக்கும் என்று தினமலர் செய்தி வெளியிட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Photo

Sources

Tweet from @dinamalarweb dated Jan 01, 2023

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular