இந்தியா மன்னிப்பு கேட்காவிட்டால் இந்தியாவில் விளையாட மாட்டேன் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலி டிவீட் செய்ததாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா தொலைக்காட்சி விவாதம் ஒன்றில், இஸ்லாமிய மதத் தலைவர் முகமது நபி குறித்து பேசிய சர்ச்சை பேச்சுக்கு உலகம் முழுவதும் பல நாடுகளிலிருந்து கண்டனம் வரும் நிலையில், “இந்தியா தனது அவதூறான அறிக்கைக்கு மன்னிப்பு கேட்கவில்லை என்றால் நான் மீண்டும் விளையாட இந்தியா செல்ல மாட்டேன், ஐபிஎல்-லையும் புறக்கணிப்பேன். மேலும் எனது சக முஸ்லிம் சகோதரர்களும் அவ்வாறே செய்யும்படி வேண்டுகோள் விடுக்கிறேன்” என்று இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலி டிவீட் செய்ததாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.



Also Read: திமுக ஆட்சியில் ரேஷன் அரிசியை சாக்கடையில் கொட்டி மீண்டும் அள்ளுவதாக பரவும் காணொளி!
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
இந்தியா மன்னிப்பு கேட்காவிட்டால் இந்தியாவில் விளையாட மாட்டேன் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலி டிவீட் செய்ததாக தகவல் ஒன்று பரவியதைத் தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
வைரலாகும் டிவீட்டானது @Moeen_Ali18 என்ற டிவிட்டர் பயனர் ஐடியிலிருந்து பதிவிடப்பட்டிருந்து. அந்த பயனர் ஐடியை கூர்ந்து நோக்கியதில், இந்த ஐடியானது நீல நிற டிக் இல்லாமல் அன்வெரிஃபைட்(Unverified) நிலையில் இருந்ததை காண முடிந்தது. அதேபோல் இந்த ஐடியானது சமீபத்தில்தான் (மே 2022) உருவாக்கப்பட்டுள்ளது. அந்த ஐடியிலேயே அது மொயின் அலியின் அதிகாரப்பூர்வ பயனர் ஐடி இல்லை என்று குறிப்பிடப்பட்டிருந்ததை காண முடிந்தது.

தற்போது இந்த ஐடியானது டிவிட்டர் நிறுவனத்தால் முடக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஆய்வு செய்ததில் மொயின் அலிக்கு அதிகாரப்பூர்வமான டிவிட்டர் கணக்கு, இன்ஸ்டாகிராம் கணக்கு போன்றவை இல்லை என்பதையும், எந்த சமூக வலைத்தளத்திலும் மொயின் அலி இல்லை என்பதையும் அறிய முடிந்தது.
இதனையடுத்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தை நியூஸ்செக்கர் சார்பில் தொடர்புக் கொண்டு வைரலாகு டிவீட் குறித்து விசாரிக்கையில், மொயின் அலி இதுபோன்று எந்த ஒரு அறிக்கையையும் கொடுக்கவில்லை, மொயின் அலி பேரில் இயங்கும் டிவிட்டர் கணக்கு போலியானது. மொயின் அலி எந்த ஒரு சமூக ஊடகத்திலும் இல்லை” என்று பதிலளித்தனர்.
Also Read: இந்திய ரூபாய் நோட்டுகளில் அப்துல்கலாம், தாகூர் படங்கள் இடம்பெறவிருப்பதாக பரவும் தகவல்!
Conclusion
இந்தியா மன்னிப்பு கேட்காவிட்டால் இந்தியாவில் விளையாட மாட்டேன் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலி டிவீட் செய்ததாக பரவும் தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் வைரலாகும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.
Result: Imposter content/False
Sources
Analysis of Twitter handle @Moeen_Ali18
Email correspondence with English Cricket Board
(இந்த கட்டுரையானது ஏற்கனவே நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இதை தமிழில் ராம்குமார் கலியமூர்த்தி மறு உருவாக்கம் செய்துள்ளார்)
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)