திங்கட்கிழமை, மே 6, 2024
திங்கட்கிழமை, மே 6, 2024

HomeFact Checkஇந்துத்துவம் என்கிற பெயரால் வஞ்சிக்கப்பட்டோம் என்று உத்தவ் தாக்கரே கூறினாரா?

இந்துத்துவம் என்கிற பெயரால் வஞ்சிக்கப்பட்டோம் என்று உத்தவ் தாக்கரே கூறினாரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

இந்துத்துவம் என்கிற பெயரால் வஞ்சிக்கப்பட்டோம் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

இந்துத்துவம் என்கிற பெயரால் தண்டிக்கப்பட்டோம் என்று  உத்தவ் தாக்கரே கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்

“இந்துத்துவம் என்கிற பெயரால் வஞ்சிக்கப்பட்டோம். பாலா சாகிப் தாக்கரே இந்துத்துவம் என்கிற மத அடையாளத்தை மறுத்து மராட்டியர் என்கிற இன அடையாளத்தை முன்னெடுத்து இருந்தால் இன்று நாக்பூர் பிராமணர்களால் வஞ்சிக்கப்பட்டிருக்க மாட்டோம்” என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலாகி வருகின்றது.

இந்துத்துவம் என்கிற பெயரால் தண்டிக்கப்பட்டோம் என்று  உத்தவ் தாக்கரே கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் - 01

Facebook Link

இந்துத்துவம் என்கிற பெயரால் தண்டிக்கப்பட்டோம் என்று  உத்தவ் தாக்கரே கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் - 02

Facebook Link

இந்துத்துவம் என்கிற பெயரால் தண்டிக்கப்பட்டோம் என்று  உத்தவ் தாக்கரே கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் - 03

Facebook Link

Also Read: என் காலில் விழுந்து பதவி பெற்ற நாய் ஒன்று கட்சியை கவ்வி சென்றுவிட்டது என்றாரா சசிகலா?

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

இந்துத்துவம் என்கிற பெயரால் வஞ்சிக்கப்பட்டோம் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.  

உத்தவ் தாக்கரே கடந்த புதனன்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். உத்தவ் தாக்கரே தனது ராஜினா குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இவ்வீடியோவானது NDTV உள்ளிட்ட பல ஊடகங்களில் வெளிவந்திருந்தது.

இந்த வீடியோவில் எந்த ஒரு இடத்திலும் இந்துத்துவம் என்கிற பெயரால் தண்டிக்கப்பட்டோம் என்கிற கருத்தை தாக்கரே கூறியதாக இல்லை. ஜூனியர் விகடனின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி இத்தகவல் பரப்பப்படுவதால் ஜூனியர் விகடன் இந்த நியூஸ்கார்டை வெளியிட்டுள்ளதா என ஜூனியர் விகடனின் சமூக ஊடகப் பக்கங்களை ஆய்வு செய்தோம். இதில் உத்தவ் தாக்கரே ராஜினாமா குறித்து  ஜூனியர் விகடன் நியூஸ்கார்ட் வெளியிட்டிருந்ததை காண முடிந்தது

இந்த நியூஸ்கார்டை எடிட் செய்தே மேற்கண்ட நியூஸ்கார்டு உருவாக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும் எடிட் செய்யப்பட்ட நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

ஜூனியர் விகடனும் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என்று அதன் சமூக  ஊடகப் பக்கங்களில் தெளிவு செய்துள்ளது.

Also Read: வாரிசு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் காப்பியடிக்கப்பட்டதா?

Conclusion

இந்துத்துவம் என்கிற பெயரால் வஞ்சிக்கப்பட்டோம் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்று நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் வைரலாகும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.

Result: Missing Context

Sources

NDTV’s YouTube’s Video, Published on 29th June, 2022
Junior Vikatan’s Tweet, Tweeted on 1st Juy, 2022


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular