இந்திய முஸ்லீம்கள் தேசிய கொடியை எரித்ததாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

“இந்த மண்ணில் பிறந்து, இந்நாட்டில் வாழ்ந்து, பாரதம் தந்த அத்தனை பயன்களையும் அனுபவித்துக்கொண்டு தாய்நாட்டின் கொடியை ஒரு உண்மையான குடிமகனால் எரிக்க முடியாது… பெற்றதாயும் தாய்நாடும் ஒன்றுதான்…” என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று டிவிட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.



Also Read: இந்தியா மன்னிப்பு கேட்காவிட்டால் இந்தியாவில் விளையாட மாட்டேன் என்றாரா மொயின் அலி?
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
இந்திய முஸ்லீம்கள் தேசிய கொடியை எரித்ததாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி, இதன் பின்னணியில் இருக்கும் உண்மைத்தன்மை குறித்து தேடினோம்.
இத்தேடலில் வைரலாகும் புகைப்படத்தில் இருக்கும் சம்பவம் இந்தியாவில் நடந்ததல்ல, அது பாகிஸ்தானில் நடந்தது என்பதை அறிய முடிந்தது.
பாஜகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் ஷர்மா தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் நபிகள் நாயகம் குறித்து பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், குவைத், சவூதி, கத்தார் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் பெரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன.
இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானின் தலைநகரமான இஸ்லமாபாத்தில் எண்ணற்ற இஸ்லாமியர்கள் இந்தியாவிற்கு எதிராக கண்டனம் தெரிவித்து ஊர்வலம் சென்றனர். இந்த ஊர்வலத்தின்போது இந்திய தேசியக் கொடியை போராட்டக்காரர்கள் எரித்துள்ளனர். இந்நிகழ்வின்போது எடுக்கப்பட்ட புகைப்படமே இந்தியாவில் எடுக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றது.

இந்நிகழ்வு குறித்து ஊடகங்களில் செய்தி வந்துள்ளது. அவற்றை இங்கே, இங்கே, மற்றும் இங்கே படிக்கலாம்.
Also Read: இந்திய ரூபாய் நோட்டுகளில் அப்துல்கலாம், தாகூர் படங்கள் இடம்பெறவிருப்பதாக பரவும் தகவல்!
Conclusion
இந்திய முஸ்லீம்கள் தேசிய கொடியை எரித்ததாக சமூக வலைத்தளங்களில் பரவும் புகைப்படம் இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல, அது பாகிஸ்தானில் எடுக்கப்பட்டது. இந்திய தேசியக் கொடியை எரித்தது இந்திய முஸ்லீம்கள் அல்ல, அவர்கள் பாகிஸ்தான் முஸ்லீம்கள். இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் வைரலாகும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.
Result: Misleading Content/Partly False
Sources
Article Published from AP News, Dated on June 09, 2022
Article Published from ABC News, Dated on June 09, 2022
Article Published from The star, Dated on June 09, 2022
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)