Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.
அனைவருக்கும் செல்வத்தை தரும் மாயன் வானியல் சாஸ்திர தகடு இலண்டன் அருங்காட்சியகத்தில் இருப்பதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
வாசகர் ஒருவர் நியூஸ்செக்கரின் வாட்ஸ்ஆப் உதவி எண்ணான 9999499044 என்கிற எண்ணுக்கு புகைப்படம் ஒன்றை அனுப்பி, அதன் உண்மைத்தன்மை குறித்து கேட்டிருந்தார்.
அப்புகைப்படத்தில்,
படத்தில் உள்ள இந்த சக்கரம் மாயன்களின் வானியல் சாஸ்திரம் கண்டறிய பயன்படுவது. இது கண்டவுடன் அதிர்ஷ்டம் நம்மை தேடி வரும். இதை எதிரி நாட்டவர் கண்ணில் படாமல் மறைத்து வைத்தனர். ஆனால் அந்நாடு மிகவும் ஏழ்மை நிலையை அடைந்தது. ஏனெனில் இந்த அற்புத தகடானது அனைவருக்கும் செல்வத்தை அளிப்பதற்கு கடவுளால் அருளப்பட்டது. தற்போது இந்த சக்கரத்தின் புகைப்படம் லண்டனில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதை அங்கு வேலை செய்யும் பணியாளர் ஒருவர் இதனை அடையாளம் கண்டு இதை புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதை அவர் நண்பருக்கு பகிர்ந்தார். அவருக்கு சில நாட்களிலேயே பதவி உயர்வு மற்றும் பெரிய பண உதவியும் கிடைக்கப்பட்டது. அதை பகிர மறுத்த அவரின் நண்பர் தொழிலில் மிகப்பெரிய நஷ்டத்தை அடைந்தார், உடல்நிலையும் வெகுவாக பாதிக்கப்பட்டது. எனவே நெருக்கமான நண்பர்களுக்கு இந்த அதிர்ஷ்ட சக்கரத்தை பகிருங்கள்.
என குறிப்பிடப்பட்டிருந்தது.
நாம் தொடர்ந்து தேடியதில் சமூக வலைத்தளங்களில் பலரும் இத்தகவலை பகிர்ந்திருப்பதை காண முடிந்தது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
அனைவருக்கும் செல்வத்தை தரும் மாயன் வானியல் சாஸ்திர தகடு இலண்டன் அருங்காட்சியகத்தில் இருப்பதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து, வைரலாகும் படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி இதுக்குறித்த உண்மையை தேடினோம்.
இத்தேடலானது pinterest.com தளத்திற்கு நம்மை அழைத்து சென்றது. இத்தளத்தில் வைரலாகும் புகைப்படத்தில் இருப்பது ஆஸ்டெக் சோலார் காலண்டர் எனவும் இது மெக்ஸிகோவில் இருக்கும் மானுடவியல் (ஆந்திரபோலஜிகல்) அருங்காட்சியகத்தில் உள்ளது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
தொடர்ந்து தேடுகையில் யூடியூப் பக்கம் ஒன்றில் ‘Aztec calendar – National Anthropology Museum in Mexico City (மெக்ஸிகோ நேஷ்னல் ஆந்திரபோலஜிகல் அருங்காட்சியகத்தில் உள்ள ஆஸ்டெக் காலண்டர்)’ என தலைப்பிட்டு வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்ததை காண முடிந்தது. அவ்வீடியோவில் ஆஸ்டெக் காலண்டர் ஒரு பெரிய பாறையில் செதுக்கப்பட்டிருந்ததையும், அதன் முன் நின்று சிலர் படம் எடுத்துக்கொள்வதையும் காண முடிந்தது. இதனடிப்படையில் காண்கையில் ஆஸ்டெக் காலண்டர் உலோகத்தால் செய்யப்பட்ட தகடல்ல என்பது தெளிவாகின்றது.
ஆஸ்டெக் காலண்டர் குறித்து மேலும் தேடுகையில் இந்த காலண்டர் ஆஸ்டெக் சாம்ராஜ்யம் அழிவதற்கு முன் மெக்ஸிகோவில் பயன்படுத்தப்பட்டது என்பதை அறிய முடிந்தது. ஆஸ்டெக் வம்சத்தினர் என்பவர்கள் 15 மற்றும் 16 ஆம் ஆண்டுகளில் மெக்ஸிகோவின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளை ஆட்சி புரிந்தவர்களாவர்.
மேற்கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் காண்கையில் நமக்கு தெளிவாவது ஏதேனில்,
- வைரலாகும் படத்தில் இருப்பது மாயன் வானியல் சாஸ்திர தகடு அல்ல, அது ஆஸ்டெக் காலண்டர்.
- இந்த காலண்டர் இலண்டன் அருங்காட்சியகத்தில் இல்லை, அது மெக்ஸிகோவில் உள்ளது.
- இது உலோகத்தாலான தகடு அல்ல, பாறையாலானது.
Also Read: ஹெல்மெட் அணியாதவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று முதல்வர் உத்தரவிட்டாரா?
Conclusion
அனைவருக்கும் செல்வத்தை தரும் மாயன் வானியல் சாஸ்திர தகடு இலண்டன் அருங்காட்சியகத்தில் இருப்பதாக கூறி சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Sources
YouTube Video, from tomaszszczesniak1 on Jan 29, 2016
Aricle from Brittannica
Aricle from Pinterest
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.