வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26, 2024
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26, 2024

HomeFact CheckPoliticsதர்மபுரி எம்.பி. செந்தில்குமார் கிரிக்கெட் விளையாடும்போது கீழே விழுந்தாரா?

தர்மபுரி எம்.பி. செந்தில்குமார் கிரிக்கெட் விளையாடும்போது கீழே விழுந்தாரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

தர்மபுரி எம்.பி. செந்தில்குமார் கிரிக்கெட் விளையாடும்போது கீழே விழுந்ததாக கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

தர்மபுரி எம்.பி. செந்தில்குமார் கிரிக்கெட் விளையாடும்போது கீழே விழுந்ததாக  பரவும் தகவல்

“என்ன சார் பூமி பூஜை செய்கிறீர்கள்? பூமியைத் தொட்டுப் வழிபாடு செய்வதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லை.. அது இந்து தர்மம் அசே.. சாஷ்டாங்கமாக கீழே விழுகிறாய்” என்று குறிப்பிட்டு பாஜகவை சேர்ந்த காயத்ரி ரகுராம் அவரது டிவிட்டர் பக்கத்தில் இவ்வீடியோவை பதிவிட்டுள்ளார்.  

தர்மபுரி எம்.பி. செந்தில்குமார் கிரிக்கெட் விளையாடும்போது கீழே விழுந்ததாக  பரவும் தகவல் - 01
Screenshot from Twitter @BJP_Gayathri_R

இவரைப்போல பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து, தர்மபுரி எம்.பி. செந்தில்குமார் கிரிக்கெட் விளையாடும்போது கீழே விழுந்ததாக பரப்பி வருகின்றனர்.

தர்மபுரி எம்.பி. செந்தில்குமார் கிரிக்கெட் விளையாடும்போது கீழே விழுந்ததாக  பரவும் தகவல் - 02
Screenshot from Facebook / Guruji Bjp
தர்மபுரி எம்.பி. செந்தில்குமார் கிரிக்கெட் விளையாடும்போது கீழே விழுந்ததாக  பரவும் தகவல் - 03
Screenshot from Facebook / M Nachiappan

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: சென்னையில் கழிவுநீர் வடிகால் மேல் கட்டப்பட்டிருந்த பிளாட்ஃபார்ம் உடைந்து 5 பேர் சாக்கடைக்குள் விழுந்ததாக பரவும் வீடியோ உண்மையானதா?

Fact Check/Verification

தர்மபுரி எம்.பி. செந்தில்குமார் கிரிக்கெட் விளையாடும்போது கீழே விழுந்ததாக கூறி வீடியோ ஒன்று வைரலானதைத் தொடர்ந்து, அதன் உண்மைத்தன்மை குறித்து அறிய, அவ்வீடியோவை ஒவ்வொரு கீ ஃபிரேம்களாக பிரித்து தேடினோம். இத்தேடலில் கடந்த ஜூன் மாதத்தில் இதே வீடியோ இந்தி பாடல் ஒன்றை பேக்ரவுண்டாக கொண்டு  ‘சிரிப்பு  வீடியோ’ என்று தலைப்பிட்டு சமூக ஊடகங்களில் வைரலானதை காண முடிந்தது.

மேலும் தேடுகையில்,  ஜீ நியூஸ் இந்தி இணையத்தளத்தில் இந்த வீடியோ குறித்து செய்தி வந்திருந்ததை காண முடிந்தது. ஆனால் அச்செய்தியில் கீழே விழுந்த நபர் எம்.பி.செந்தில்குமார் என்று குறிப்பிட்டிருக்கவில்லை, பேட்ஸ்மேன் என்றே குறிப்பிடப்பட்டிருந்தது.

தர்மபுரி எம்.பி. செந்தில்குமார் கிரிக்கெட் விளையாடும்போது கீழே விழுந்ததாக  பரவும் தகவல் - 04
Source: Zee News India/hindi

இதனையடுத்து தேடுகையில், தர்மபுரி எம்.பி. செந்தில்குமார் டிவிட்டரில் ஒருவர் பகிர்ந்த வீடியோவிற்கு, “Bat பிடிப்பது இருக்கட்டும் நான் cricket ground பக்கம் கூட சென்றது இல்லை அது போகட்டும் யாரோ ஒருவர் கீழே விழுவது நான் இல்லை என்று தெரிந்தும், ஏன் பாவம் அவரை வைத்து கிண்டல் ஒரு கேமரா எடுத்து வாருங்கள் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் விழுகிறேன் பார்த்து மகிழ்ச்சி அடையுங்கள்!” என்று பதிலளித்து டிவீட் செய்திருந்ததை காண முடிந்தது.

இதனடிப்படையில் பார்க்கையில் வைரலாகும் வீடியோவில் காணப்படுவர் செந்தில்குமார் இல்லை, அவர் வேறொருவர் என்பது தெளிவாகின்றது. அந்நபர் யார், எந்த பகுதியை சார்ந்தவர் என்பது குறித்த தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை.  

Also Read: கர்நாடகாவில் நுழைந்தவுடன் இந்துக்கள் உடைக்கு மாறினாரா ராகுல் காந்தி?

Conclusion

தர்மபுரி எம்.பி. செந்தில்குமார் கிரிக்கெட் விளையாடும்போது கீழே விழுந்ததார் என்று சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகின்றது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Sources

Article, from Zee News India/Hindi on June 12, 2022
Tweet, from Dr. Senthilkumar, MP, on October 9, 2022


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular